லைபீரியாவில் பரபரப்பு.. மருத்துவமனையில் கும்பல் தாக்குதல் - 29 எபோலா நோயாளிகள் ஓட்டம்!
மான்ரோவியா: எபோலா தாக்குதலால் சிக்கிப் போராடி வரும் லைபீரியாவில், ஒரு மருத்துவமனையில் திடீரென ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தியதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 எபோலா நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் மான்ரோவியாவில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு புகுந்த இக்கும்பல் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று மாலையில்தான் இந்தத் தாக்குதல் குறித்த விவரம் வெளியானது.
இந்த தாக்குதல் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் பீதியடைந்து ஓடினர். இவர்களில் 29 எபோலா நோயாளிகளும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நோயாளி கூட இல்லை
இதுகுறித்து கலவரத்தை நேரில் பார்த்த ரிபெக்கா வெஸ்ஸே என்பவர் கூறுகையில், உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த கதவுகளையும், ஜன்னல்களையும் சரமாரியாக அடித்து உடைத்தது. இதில் மருத்துவமனை முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது. ஒரு நோயாளி கூட அங்கு இல்லை. அனைவரும் ஓடி விட்டனர் என்றார்.

எபோலா நோயாளிகள் கதி என்ன?
அங்கு தனி வார்டு ஒன்றில் எபோலா பாதித்த 29 பேர் தனியாக வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தனர். அவர்களும் தாக்குதலில் தப்பி ஓடி விட்டனர். அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.

அதிபர் மீது ஆவேசம்
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் லைபீரிய அதிபர் எல்லென் ஜான்சன் சர்லீப் மீது ஆத்திரமாக இருந்துள்ளனர். அவர் பொய் சொல்கிறார். அவருக்குத் தேவை பணம்தான். இதனால்தான் எபோலா என்று பொய் சொல்லி வருகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

டாக்டர்கள், நர்ஸுகளும் ஓட்டம்
இந்தத் தாக்குதலில் பீதியடைந்து டாக்டர்களும், நர்ஸுகளும் கூட ஓடிப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

லைபீரியாவில் அதிக பலி
கடந்த 1976ம் ஆண்டு முதல் உலகை வலம் வந்து கொண்டிருக்கும் எபோலா நோய் தற்போது ஆப்பிரிக்க நாடுகளைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இதற்கு லைபீரியாவில் மட்டும் 413 பேர் இறந்துள்ளனர். கினியாவில் 380 பேரும், சியர்ரா லியோனில் 348 பேரும், நைஜீரியாவில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications