பெற்றோரின் கவனக்குறைவால் விபரீதம்- 2 வயது தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது அக்கா
நியூயார்க்: அமெரிக்காவில் சொந்த அக்காவே, தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் "உத்தவில் கேகி" பகுதியில் ஒரு வீட்டில் 3 வயது சிறுமி ஒருத்தி தனது 2 வயது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் அவர்களது தாயார் இருந்தார்.
அப்போது அந்த சிறுமி வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்தாள். அதைப் பார்த்ததும் உடன் இருந்த அவளது தம்பி அதை பறித்தான். இதனால் அவர்களுக்கு இடையே நடந்த போராட்டத்தில் சிறுமியின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்தது.
துப்பாக்கி குண்டு சிறுவனின் உடலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த தாயார் குண்டடிப்பட்டு மயங்கி கிடந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை நடந்தது.
இருந்தும் அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்த மாதத்தில் மட்டும் இது போன்று 4 சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகள் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை குழந்தைகள் விளையாடும் இடத்தில் அவர்களது பெற்றோர் கவனக்குறைவாக வைத்திருந்ததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என கூறினர்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications