கேமரூனில் ஓடும் பேருந்தில் 30 பயணிகளை கடத்திய போக்கோ ஹரம் தீவிரவாதிகள்
யாவுண்டே: நைஜீரியா எல்லையையொட்டி உள்ள மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேருந்தில் சென்ற 30 பயணிகளை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
போக்கோ ஹரம் தீவிரவாதிகள் ஆப்பிரிக்காவின் மத்திய, வடகிழக்கு பகுதிகளில் அட்டூழியம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நைஜீரியா எல்லையையொட்டி உள்ள மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள தவ்ரூ நகரில் பேருந்தில் சென்று கொண்டிருந்த 30 பயணிகளை போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட பயணிகள் என்ன ஆனார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவர்களை தீவிரவாதிகள் தாக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கெராவா நகரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் ராணுவ வீரர்கள் 9 பேர் காயம் அடைந்தனர்.
ஜனவரி 1ம் தேதி கெராவா பகுதியில் தீவிரவாதிகள் பேருந்தில் சென்ற 11 பயணிகளை கொலை செய்தனர்.
ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவுக்கு கடந்த 2009ம் ஆண்டில் இருந்து போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் தலைவலியாக உள்ளது. தீவிரவாதிகள் ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறார்கள். மேலும் நைஜீரியாவின் வடக்கு பகுதியை முஸ்லீம்களின் மாநிலமாக்க தீவிரவாதிகள் விரும்புகிறார்கள்.
நைஜீரியாவின் அண்டை நாடுகளான காமரூன், சாட் மற்றும் நைஜர் ஆகியவையும் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications