ஜிம்பாப்வேயில் பயங்கர பஸ் விபத்து: 30 பேர் பலி; 36 படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஹராரே: ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே - புலவாயோ நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றும் மினி பேருந்தும் சென்று கொண்டிருந்தன. அப்போது ஒரு பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் வேகமாகச் சென்ற பஸ் நிலை தடுமாறி மறுதிசையில் வந்து கொண்டிருந்தது பஸ் மீது பயங்கரமான மோதியது.

30 dead in Zimbabwe bus accident

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர்கள் உட்பட 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் ஜிம்பாவேயில் நடந்த சாலை விபத்துக்களில் இது கோர விபத்து என போலீசார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாடு இல்லாத காரணத்தால் நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+