நினைக்கவே பயங்கரம்! 3 மணிநேரத்தில் 30 முறை ஜப்பானை புரட்டி எடுத்த அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
டோக்கியோ: ஜப்பானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதனைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கி இருப்பதும் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனையடுத்து ஜப்பான் மேற்கு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழுந்தன. கடலில் சுனாமி பேரலைகள் 5 மீட்டர் உயரம் வரை எழுந்து நகரங்களைத் தாக்கியது. ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து வடகொரியா, ரஷ்யாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போதைய நிலையில் ஜப்பான் நிலநடுக்க, சுனாமி பாதிப்பு விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. ஜப்பான் கடற்கரை ஓர பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். தற்போது நிலநடுக்கம், சுனாமி பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்பு படை களமிறங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜப்பான் அணு உலைகளில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கான அறிவுறுத்தலை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ளது. ஜப்பானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் 3 மணிநேரத்தில் 30 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் புரட்டி எடுத்துள்ளது.. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் சராசரியாக 4.0 அலகுகளாகப் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம், சுனாமி பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications