டேய் எப்புட்றா! 180 டிகிரிக்கு பாதத்தை பின்னோக்கி திருப்பி அமெரிக்க பெண் சாதனை.. கின்னஸில் கெல்சி!
வாஷிங்டன்: ஆஹா! அமெரிக்காவில் நியூ மெக்சிகோவில் 32 வயது பெண் ஒருவர் தனது ஒரு பாதத்தை கிட்டதட்ட 180 டிகிரிக்கு திருப்புகிறார். மேலும் இந்த சாதனைக்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். என்ன ஒன்று அவை நம்மில் மறைந்திருக்கும். அது ஏதாவது ஒரு சூழலில் வெளியே வரும். அதை நாமோ அல்லது நம் மீது அக்கறை கொண்டவர்களோ கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்தால் அதை பயன்படுத்தி என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.

இதை வைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் ஒரு துறையில் ஒருவர் சாதித்த சாதனையை முறியடித்து நாம் புதிய சாதனை படைக்க வேண்டும். இதற்காக ஆசியா சாதனை புத்தகம், உலக கின்னஸ் சாதனை புத்தகம், லிம்கா சாதனை புத்தகம் என உள்ளன.
நாம் செய்யும் சாதனை மேற்கண்ட சாதனை பதிவு செய்வோரின் தகுதிகள், விதிகளை பூர்த்தி செய்தால் அதில் நமது பெயரும் இடம் பெறும். அந்த வகையில் நியூ மெக்சிகோவை சேர்ந்த பெண் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். 32 வயதான கெல்சி கிரப் தனது பாதத்தை 180 டிகிரி அளவுக்கு திருப்பி சாதனை படைத்துள்ளார்.
பாதங்களை நம்மால் ஓரளவுக்கு பக்கவாட்டில் திருப்ப முடியும். ஆனால் கெல்சியோ அப்படியே பின்பக்கம் திருப்புகிறார். ஒரு கால் முன்பக்கம் பார்த்த படியும் மறு கால் பின்பக்கம் பார்த்த மாதிரியும் வைத்திருக்கிறார். இந்த திறமை அவருக்குள் இருக்கிறது என்பதை தூண்டி விட்டதே அவருடன் பணியாற்றும் ஊழியர் மூலமாகத்தான்.
கெல்சி நியூ மெக்சிகோவில் ஒரு நூலகத்தில் பணியாற்றி வருகிறார். அப்போதுதான் அந்த நூலகத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு உலக சாதனைப் படைத்தோரின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வந்தது. அதை அவருடன் பணிபுரியும் ஊழியர் சும்மா ரேண்டமாக ஒரு பேஜை ஓப்பன் செய்தார். அப்போது அதில் பாதத்தை திருப்பி சாதனை புரிந்தவர் குறித்து விவரங்கள் இருந்தன.
அதனால் ஒரு பேப்பரின் மேல் நின்று கொண்டிருந்த போது கெல்சி தனது பாதத்தை திருப்ப முயற்சித்தார். அப்போது அவரால் முடிந்தது. இதனால் எப்படியும் உலக சாதனையை முறியடிக்க நல்ல சந்தர்ப்பம் என்பதை கருதினார். பாதத்தை பின்பக்கம் திருப்புவதை எப்படி அளவிடுவார்கள் என்று கூட கெல்சிக்கு தெரியாது. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் செய்தார்.

இதுகுறித்து கெல்சி கூறுகையில் என்னால் பாதத்தை திருப்புவதற்கு நன்கு வளையும் தன்மையுடன்தான் இருந்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் பாதத்தை 90 டிகிரிக்கு மேல் திருப்ப முடியும் என்பதை நான் நினைத்திருந்தேன். நான் அதற்கான முயற்சிகளை கூட எடுக்கவில்லை. நான் ஐஸ் ஸ்கேட்டிங் சென்ற போது என்னால் எனது பாதத்தை நகர்த்தாமலேயே திருப்ப முடிந்தது அறிந்தேன்.
நான் இதை எல்லோரிடமும் சொன்ன போது யாரும் நம்பவில்லை. நான் பாதத்தை திருப்பிய போதுதான் அனைவரும் நம்பினார்கள். மேலும் என்னால் கின்னஸ் சாதனையை முறியடிக்க முடியும் என நம்பிக்கையும் கொடுத்தனர். இதுகுறித்து கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். ஏற்கெனவே சாதனை படைத்தவர் ஒரு ஆண். அவரும் அமெரிக்காவில் உதாவை சேர்ந்த ஆரான் ஃபோர்டு ஆவார். அவரால் 173.03 டிகிரி வரை பாதத்தை பின்பக்கம் திருப்பி சாதனை படைத்திருந்தார். பெண்களில் நான் 171.4 டிகிரி வரை திருப்பி உலக சாதனை பட்டியலில் பெண்கள் பிரிவில் இடம் பிடித்தேன். இவ்வாறு கெல்சி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications