வெடிக்கிறதா 3ம் உலகப்போர்? ஒரே நேரத்தில் 5 இஸ்லாமிய நாடுகளை தாக்கும் இஸ்ரேல்.. பதறும் உலக நாடுகள்
டெல் அலிவ்: இஸ்ரேல் - காசா இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த மோதல் தற்போது மத்திய கிழக்கில் விரிவடைந்து பெரிய போராக மாறும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பாலஸ்தீனம், லெபனான், ஈரான் உள்பட 5 நாடுகள் மீது இஸ்ரேல் மோதி வருவது தான் காரணம். இதனால் மத்திய கிழக்கில் 3ம் உலகப்போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் 150க்கும் அதிகமான ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ்வை குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது வான்வெளி தாக்குதலை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு மூலம் ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் சமாளித்தது.

இருப்பினும் ஈரானின் இந்த தாக்குதல் என்பது இஸ்ரேலை கோபப்படுத்தியது. ஈரானும், இஸ்ரேலும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளாத நிலையில் இந்த தாக்குதல் இஸ்ரேலை டென்ஷனாக்கியது. இதையடுத்து இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்தது.
அதன்படி இன்று இஸ்ரேலில் இருந்து ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரான் அருகே பல இடங்களில் குண்டுகள் வெடித்து சிதறியுள்ளன. குறிப்பாக இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையத்தின் அருகேயும் குண்டுகள் வெடித்துள்ளன. அதேபோல் ஐஆர்ஜிசி எனும் டெக்ரானில் உள்ள இஸ்லாமிக் புரட்சிகர காவல்படை (Islamic Revolutionary Guards Corps அல்லது IRGC) தலைமையிடத்தையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இது தற்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இன்று அதிகாலையில் சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரின் புறநகர் நகரில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஈராக் நாட்டிலும் இன்று தெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ராவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பாஸ்ரா என்பது ஷியா கிளர்ச்சியாளர்களின் தளமாக உள்ளது. குறிப்பாக சதாம் உசைன் காலத்தில் இங்கு தான் ஷியா கிளர்ச்சியாளர்கள் முகாமிட்டு இருந்தனர். இதன்மூலம் இன்று ஒரே நாளில் இஸ்ரேல் 3 நாடுகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுதவிர பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாசுக்கு இடையேயான போரை இஸ்ரேல் தொடர்ந்து வருவதோடு, லெபனானில் இருந்து குடைச்சல் தரும் ஹிஸ்புல்லாக்களையும் அந்த நாடு சமாளித்து வருகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 5 நாடுகளுடன் இஸ்ரேல் அட்டாக் செய்து வருகிறது. இது தற்போது 3ம் உலகப்போருக்கான தொடக்கப்புள்ளியாக மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்தை பொறுத்தவரை இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் தான் இஸ்ரேல் உள்ளது. இஸ்ரேலை பொறுத்தவரை யூதர்கள் அதிகம் உள்ளனர். மத்திய கிழக்கில் இருக்கும் ஒரே யூத நாடு என்பது இஸ்ரேல் மட்டும் தான். இதனால் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணையலாம் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் பாலஸ்தீனத்தின் காசா, சிரியா மற்றும் லெபனானுடன் இஸ்ரேல் மோதலை தொடங்கி வருகிறது. ஈரான் மற்றும் ஈராக் நாடுகள் நேரடியாக இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் கூட காசாவில் செயல்படும் ஹமாஸ் மற்றும் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புகள் ஈரான் ஆதரவில் செயல்படுகின்றன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதால் ஈரான் நேரடியாக இஸ்ரேலுடன் மல்லுக்கட்டுகிறது.
அதேபோல் ஈராக்கை எடுத்து கொண்டால் தொடக்கம் முதலே இஸ்ரேல் நாட்டுடன் நல்ல உறவு என்பது கிடையாது. இஸ்ரேல் 1948 ல் தனி நாடாக உருவானதில் இருந்தே இருநாடுகளுக்கும் மோதல் என்பது இருந்து வருகிறது. இஸ்ரேலை தனி நாடாக ஈராக் அங்கீகரிக்காத நிலையில் தொடர்ந்து இருநாடுகள் இடையே யுத்தம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி ஈராக்கில் ஒசாமா பின்லேடன் இருந்தபோது இஸ்ரேலுக்கு எதிரான சதிவேலைகளை அந்த நாடு அதிகம் செய்தது. இதனால் மொத்தமாக தங்களின் எதிரி நாடுகளுக்கு ‛செக்’ வைக்கும் வகையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா, லெபனான், ஈரான், சிரியா, ஈராக் என 5 இஸ்லாமிய நாடுகளுடன் மோதி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!











Click it and Unblock the Notifications