இந்தோனேசியா கடும் நிலநடுக்கம்..கடலில் இடிந்து விழுந்த ஹோட்டல்..4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடற்கரையை ஒட்டி இருந்த ஹோட்டல் இடிந்து கடலில் விழுந்ததால் 4 பேர் உயிரிழப்பு.

Subscribe to Oneindia Tamil

பப்புவா: இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவாகியுள்ளது. கடற்கரையை ஒட்டி இருந்த ஓட்டல் இடிந்து கடலில் விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் வியாழக்கிழமையன்று இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. பப்புவாவின் வடக்கு கடற்கரைக்கு அருகிலுள்ள ஜெயபுராவில் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதாகவும், இது 22 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

4 killed Earthquake hits Indonesia as restaurant collapses

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளுக்குள் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இதில் கடற்கரையை ஒட்டி இருந்த ஓட்டல் இடிந்து கடலில் விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

பப்புவாவின் தலைநகரான ஜெயபுராவில் வசிக்கும் ட்ரை ஆசிஹ் , இந்த நிலநடுக்கத்தின் போது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். காரில் சக்கரங்கள் உயர்த்தப்பட்டதைப் போல உணர்ந்ததாக கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தால் மிதக்கும் உணவகம் கடலில் சரிந்து விழுந்ததில் அதில் இருந்த 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி, "பாதிக்கப்பட்ட நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மீட்புப் பணியாளர்கள் உணவு விடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயிர் பிழைத்தவர்களை தேடினர். வீடுகள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளும் சேதமடைந்துள்ளதாக முஹாரி கூறினார். நகரின் மருத்துவமனையில் சில நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலைகள் ஏற்படுகின்றன. "ரிங் ஆஃப் ஃபயர்" இல் அதன் இருப்பிடம் உள்ளதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

ஜனவரி முதல் பப்புவாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜனவரி 2 முதல் ஜெயபுரா நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 1,079 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன அவற்றில் 132 நிலநடுக்கங்கள் குடியிருப்பாளர்களால் உணரப்படும் அளவுக்கு வலிமையானவை என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டில், மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டது. பல நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கியதில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதியன்று அன்று மேற்கு ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. இதில் 331 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+