மாஸ்கோவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. 137 பேர் பலி! 4 பேர் அதிரடியாக கைது
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 22ம் தேதி இரவு இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 137 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரஷ்ய காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 22 தேதி இரவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 'பிக்னிக்' எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதுடன் 182 பேர் படுகாயமடைந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் வெடிபொருட்களையும் பயன்படுத்தியதால், கச்சேரி நடந்த கட்டிடம் தீ பற்றி எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து மாஸ்கோ மேயர் சோபியான் கூறுகையில், "குரோகஸ் சிட்டி மையத்தில் பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியையும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்த சம்பவத்தை கொடூரமான குற்றம் என்று விமர்சித்துள்ளார். உலக நாடுகள் இந்த சம்பவத்தை கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது உக்ரைனுடன்-ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. எனவே, உக்ரைன் கிளர்ச்சி படைகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ரஷ்ய தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க இந்த தாக்குதலை கண்டித்திருந்தாலும், உக்ரைன் தொடர்பு எதுவும் இதில் இல்லை என்று கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இதனை விளக்கியுள்ளார். அதாவது "மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உக்ரைனியர்கள் யாரும் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
இப்படியாக தாக்குதலை யார் நடத்தியிருப்பார்கள் என்று விவாதங்கள் எழுந்திருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரமாக தங்கள் இடங்களுக்கு திரும்பிவிட்டனர் எனவும் கூறியிருந்தனர். இதனையடுத்து இவர்களை ரஷ்ய காவல்துறை, உளவுத்துறை ஆகியவை தேடி வந்தது. இந்நிலையில் நேற்று இந்த தாக்குதல் தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கிறது.
4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தது கிடையாது. சமீபத்தில் நடந்த தேர்தலில் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications