காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல்.. 4 பெண்கள் பலி.. எங்கும் தலைகளாக காட்சியளிக்கும் ஏர்போர்ட்!
காபூல்: காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததை அந்த நாட்டு மக்கள் உணர்ந்து வெளிநாடுகளுக்கு போய் பிழைத்து கொள்ளலாம் என கருதி காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
உயிர் பிழைத்தால் போதும் என்பதால் தங்கள் சொத்து, வீடு வாசல்களை விட்டுவிட்டு குழந்தைகளுடன் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகிறார்கள். அங்கு வரும் மீட்பு விமானங்களில் ஏறி அண்டைய நாடுகளில் அகதியாக வாழ செல்கிறார்கள்.

கூட்ட நெரிசல்
இதனால் அந்த விமான நிலையமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் அதிகாரிகளையும் மக்களையும் மீட்டு அழைத்து செல்வதற்காக விமானங்களை அனுப்புகின்றன. அந்த விமானங்களில் இவர்களும் பயணித்து வருகிறார்கள்.

விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சி
இதனிடையே காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் அதை சுற்றி அமெரிக்க பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.

உயிரிழப்பு
அப்போது அந்த கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்டத்தின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் பலர் நெரிசலில் சிக்கினர். மேலும் அதிக கூட்டம் இருந்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துவிட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

நீண்ட நேரம் காத்திருப்பு
நீண்ட நேரமாக வெயிலில் அமர்ந்திருந்ததால் சோர்வாக இருந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் இறந்ததாக சொல்லப்படுகிறது. காபூல் விமான நிலையத்தின் நிலை மேலும் மோசமாக இருப்பதால் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு கூறுகையில், காபூல் விமான நிலையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் விமான நிலைய வாயிலையும் மிதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். அமெரிக்க அரசு பிரதிநிதியிடம் இருந்து ஏதேனும் தகவல் வரும் வரை விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளோம். எங்கள் நாட்டு அதிபர் இன்று காலை பாதுகாப்பு படையினரிடம் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். அது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

168 பேர் பாதுகாப்பாக மீட்பு
இந்திய விமான படைக்குச் சொந்தமான விமானத்தில் 107 இந்தியர்கள் உள்பட 168 பேர் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இரு கனரக விமானங்கள் மூலம் இந்திய தூதர் மற்றும் ஊழியர்கள் 200 பேர் மீட்கப்பட்டனர். அது போல் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு சொந்தமான விமானங்கள் மூலமும் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முழு விவரங்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் குறித்த முழு விவரங்களையும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கணக்கெடுத்து அவர்களை பாதுகாப்பாக மீட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. தனது நட்பு நாடுகளின் உதவியுடன் இவர்களை மீட்கும் பணிகளில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications