ஆஹா.. தேவதையே.. சொக்க வைக்கும் பேரழகு ஜரே!

4 வயது சிறுமியின் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உலகிலேயே மிக அழகான சிறுமி-வீடியோ

    லாகோஸ்: புகைப்படம் பேசுமா? பேசாது என்றுதான் இத்தனை காலம் நினைத்திருந்தோம். ஆனால் 4 பக்க சட்டங்களுக்குள் புகைப்படமான ஒரு சிறுமி கண்களால் பேச துவங்கி இருக்கிறாள்.

    ஆம்! அவள் ஒரு நைஜீரிய சிறுமி. நான்கே வயதுதான் ஆகிறது. அவளது பெயர் ஜரே. இவள் யார் என்று கேட்கிறீர்களா? இவள்தான் "உலகிலேயே அழகான சிறுமி" என்னும் பட்டத்தை பெற்றிருக்கிறாள்.

    இவள் மனித இனம்தான்

    இந்த புகைப்படத்தை எடுத்தது மோபே என்னும் ஒரு பெண் புகைப்பட கலைஞர். அவரும் நைஜீரியாவை சேர்ந்தவர்தான். லாகோஸ் நகரத்தில் வசித்து வருகிறார். இந்த புகைப்படத்தை எடுத்து முடித்ததும், இன்ஸ்ட்டாகிராமில் உலவ விட்டார். கூடவே அந்த போட்டாவில் "இவள் மனித இனம்தான்... தேவதையும்கூட" என்று 2 வரிகளையும் சேர்த்து பதியவிட்டிருந்தார். அவ்வளவுதான், சில நொடிகளிலேயே 10 ஆயிரம் லைக்ஸ்கள் வந்து குவிந்தன.

    ஆர்ப்பாட்டமில்லாத அழகு

    மேலும் இந்த மோபே தன் பதிவில், ஜரேவை குழந்தை வயதில் இல்லாமலும், பருவ வயதில் இல்லாமலும் ஒரு இடைப்பட்ட காலத்தில் புகைப்படமாக எடுக்க விரும்பினேன். அவளை நான் செயற்கையாக சிரிக்க வைத்து படம் பிடிக்கவில்லை, அமைதியாக, இயல்பாக, ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத அழகை மட்டும் பதிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். உண்மைதான். இந்த புகைப்படத்தை பார்த்தால் ஜரே நம்முடன் பேசுவதை போலவே உள்ளது.

    குட்டி தேவதை இவள்

    குட்டி தேவதை இவள்

    அதனால்தான் என்னவோ இன்ஸ்டாகிராமை சுற்றி வரும் அனைவருமே இந்த குட்டி தேவதையின் அழகுக்கு மயங்கி விழுந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன், உலகிலேயே அழகான சிறுமி என்றும் கூறி புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள். மோனாலிசா ஓவியத்துக்கு பிறகு ஜரே-வின் புகைப்படம்தான் தற்போது அழகானதானவும், பேசும் புகைப்படமாகவும், மற்றவர்களை பேசவைக்கும் புகைப்படமாகவும் இன்ஸ்டாவில் தவழ்ந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+