பாக். விமானப்படை தளம் மீது தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல்... அதிகாரிகள் உள்பட 42 பேர் பலி.
பெஷாவர் : பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தலிபான்கள் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
பெஷாவரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் படாபர் விமானப்படை தளம் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் பாதைகளில் இன்று வழக்கம்போல் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ உடை அணிந்து வந்த 13 தீவிரவாதிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இரண்டு பாதைகள் வழியாக நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.

கையெறி குண்டுகள், மோர்ட்டர் ரக குண்டுகள் மற்றும் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளால் பாதுகாப்பு படை வீரர்களை கண்மூடித்தனமாக தாக்கிய தீவிரவாதிகள், விமானப்படை தள வளாகத்தில் உள்ள மசூதிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படை வீரர்களும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ கேப்டன், விமானப்படை பொறியாளர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 13 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் உள்பட 22 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தற்கொலைப் படை பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து விமானப்படை தளத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில தீவிரவாதிகள் அப்பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications