டோக்கியோவை உலுக்கிய 5.0 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை.. உயிரிழப்பும் இல்லை
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வெகு அருகே மிதமான நிலநடுக்கம் பதிவானது. இதனால் டோக்கியோவைச் சுற்றிலும் உள்ள 14 பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேசமயம், டோக்கியோவிலும், பிற பகுதிகளிலும் நிலநடுக்கத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

வட கிழக்கு டோக்கியோவுக்கு 40 கி.மீ தொலைவில் இபராகி பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது பசிபிக் கடலுக்கும், வட கிழக்கு டோக்கியோவுக்கும் எல்லைப் பகுதியாக உள்ள பிரதேசம் ஆகும்.
ஜப்பான் நேரப்படி பிற்பகல் 1.24 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. பூமிக்குக் கீழே 40 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புல்லட்ட ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதேபோல இபராகி பகுதியில் உள்ள டோகாய் நகரில் அணு உலை உள்ளது. அதற்கும் ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நிலத்தட்டுக்களின் மேல்தான் ஜப்பான் தீவு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நிலநடுக்கம்தான். சிறியதும், பெரியதுமாக பல நிலநடுக்கங்களைப் பார்ப்பது ஜப்பான் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications