அமெரிக்காவில் சைக்கிள் பந்தய வீரர்கள் மீது டிரக் மோதல்: 5 வீரர்கள் பலி; 4 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் சைக்கிள் பந்தய வீரர்கள் குழுவின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் கலாமாசூ என்ற இடத்தில் 9 சைக்கிள் பந்தய வீரர்கள் குழுவாக சாலையில் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிரக் வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 5 bicyclists killed, 4 injured truck crashes in near Kalamazoo

இந்த பயங்கர விபத்தில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் படி காவல்துறையினரும், மருத்துவக்குழுவும் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்தது.

விபத்து ஏற்படுத்திய டிரக் டிரைவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவக் குழுவினர் காயமடைந்த அனைத்து வீரர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்திற்கு காரணமான 50 வயதான டிரக் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+