50 வயது தாயை 20 வயது நண்பனுக்கு திருமணம் செய்து வைத்த மகன்.. கர்ப்பம் வேற.. அடக்கொடுமையே
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த 50 வயது பெண் தனது மகனின் 20 வயது வகுப்பு தோழனை விரும்பி திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் சேர்ந்து வாழ்ந்ததில் அந்த பெண் கர்ப்பமாகி உள்ள நிலையில் இருவருக்கும் எப்படி உறவு நேர்ந்தது. திருமணம் எப்படி செய்தனர்? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்தவர் 50 வயது பெண். இவர் தொழில் முனைவோராக உள்ளார். அவரது பெயர் சிஸ்டர் ஜின். இவருக்கு திருமணமானது. ஆண் குழந்தையும் பிறந்தது. ஜின்னுக்கு 30 வயது நிரம்பியது. அப்போது கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து ஜின்னும், அவரது கணவரும் பிரிந்தனர். அதேவேளையில் ஜின் தனது மகனை தன்னுடன் வைத்து கொண்டார். அவரது பெயர் கைகாய். கைகாயுடன் ரஷ்யாவை சேர்ந்த டெஃபு என்பவர் படித்து வருகிறார். இருவருக்கும் 20 வயது ஆகிறது. டெஃபு ரஷ்யாவை சேர்ந்தவர் என்றால் சீன மொழியில் சரளமாக பேசுவார்.
இதற்கிடையே தான் கைகாய் தனது நண்பர்கள் 3 பேரை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு ஜின் விருந்து வழங்கினார். கைகாய் அழைத்து சென்ற நண்பர்களில் டெஃபுவும் ஒருவர். அப்போது ஜின் மற்றும் டெஃபு ஆகியோர் இடையே காதல் மலர்ந்துள்ளது. முதல் பார்வையிலேய இருவரும் காதல் வசப்பட்டுள்ளனர்.
ஒருநாள் இரவு டின்னர் விருந்துக்கு என்று அவரது வீட்டுக்கு சென் டெஃபு தனது பயணத்தை ஒரு வாரத்துக்கு பிறகு தான் வீட்டை விட்டு வெளியே வந்தார். ஜின்னின் சமையல் மற்றும் உபசரிப்பில் டெஃபு கவர்ந்திழுக்கப்பட்டதால் அவர் ஒரு வாரம் வரை அங்கேயே தங்கினார். ஆனால் டெஃபு தன்னை விட வயதில் சின்னவன். குறிப்பாக தனது மகனின் வகுப்பு தோழன். இருவருக்கும் 20 வயது வித்தியாசம் வேற உள்ளது. இதனால் எப்படி காதல் செய்வது? என்று ஜின் சற்று தயங்கினார்.
ஆனால் ஜின் - டெஃபு ஆகியோரின் திருமணத்துக்கு மகன் கைகாய் ஆதரவு தெரிவித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும்படி தனது தாய் ஜின்னை, கைகாய் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜின் - டெஃபு ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் மகன் கைகாய் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தான் தற்போது ஜின் கர்ப்பமாகி உள்ளார். இதுபற்றி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுபற்றி ஜின் தனது Douyin வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛தனக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் 30 வயதில் கணவரை பிரிந்தேன். அதன்பிறகு மகனின் வகுப்பு தோழனும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இப்போது கர்ப்பமாக உள்ளேன்'' என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவை பார்க்கும் பெரும்பாலானவர்கள் அவருக்கு எதிராகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஜின் சீனா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், ‛‛நான் இன்னும் இளைமையாகவே இருக்கிறேன். இதனால் தான் டெஃபுவை கவர்ந்துள்ளேன். அவர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார். பரிசுகள் மற்றும் ஆச்சரியங்களை எனக்கு வழங்கி வருகிறார்'' என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications