தலைமேல் பொத்தென விழும் சோவியத் விண்கலம்.. இன்னும் 3 நாள்தான் டைம் இருக்கு! பேரழிவுக்கு ரெடியா இருங்க
மாஸ்கோ: சோவியத் காலத்தில் அனுப்பப்பட்ட விண்கலம் விரைவில் பூமியில் விழ வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் பேரழிவு கூட ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்கலம் ஏன் இப்போது பூமியில் விழுகிறது? அப்படியெனில் இனி எல்லா விண்கலமும் இப்படித்தான் விழுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த 1972ம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியன் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலனை அனுப்பியது. வெள்ளி கிரகம் நமது சூரிய குடும்பத்தில் மிகவும் சூடான கிரகமாகும். இருப்பினும் இதில் இப்போது வரை சோவியத் விண்கலன் மட்டுமே வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. அப்படியெனில், அவர்கள் அனுப்பிய விண்கலன் எவ்வளவு பலமாக, வெப்பததை தாங்குவதாக தயாரிக்கப்பட்டிருக்கும்? இதேபோலத்தான் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலமும் இருந்தது.
அதாவது அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர் கோளாறு காரணமாக இது வெள்ளி கிரகத்திற்கு போகாமல் பூமியை சுற்ற தொடங்கியது. எவ்வளவோ முயன்று பார்த்தாகிவிட்டது. வெள்ளி கிரகத்திற்கு இந்த விண்கலத்தை அனுப்ப முடியவில்லை. பையன் போக மாட்டேன் என்று பூமியை ரவுண்டடித்து வர தொடங்கிவிட்டான். பாசக்கார பயபுள்ள. சரி எவ்வளவு நாள்தான் ரவுண்டடிப்பாப்ல? பூமியில் விழும் நேரம் தொடங்கிவிட்டது.
மே 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை இது பூமியின் மீது மோதும். வழக்கமாக பூமியின் வளிமண்டலத்தில் எந்த பொருள் நுழைந்தாலும் அது எரிந்த சாம்பலாகிவிடும். ஆனால் காஸ்மோஸ் 482 எனும் விண்கலத்தின் டிசைனே வேற. எனவே இது எரியாது. அப்படியோ முழுசா வந்து பொத்தென விழும். இதைத்தான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 453 கி.கி எடை கொண்ட இது மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பூமியில் விழ இருக்கிறது. இது விழுந்த இடத்தில் கட்டிடங்கள் இருந்தால் தரைமட்டம் ஆகிவிடும். காடு இருந்தால் காட்டுத்தீ ஏற்படும். கடலில் விழுந்தால் ஆபத்து குறைவு.
சரி இவ்வளவு கணித்திருக்கிறார்களே இது எந்த இடத்தில் விழும் என்பதை கணித்தார்களா? என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம். அதற்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்திருக்கிறார்கள். அதாவது, வடக்கு 52 டிகிரி கோணத்தில் தொடங்கி, தெற்கு 52 டிகிரி கோணத்தில் இது விழும். இப்படி சொன்னா எப்படிங்க? சரியா எந்த இடம்னு சொல்லுங்கனு கேட்கிறீங்களா. சொல்றேன்..
- நியூயார்க் - அமெரிக்கா
- லண்டன் - இங்கிலாந்து
- பாரீஸ் - பிரான்ஸ்
- டோக்கியோ - ஜப்பான்
- பெய்ஜிங் - சீனா
- சிட்னி - ஆஸ்திரேலியா
- சான்டியாகோ - சிலி
- ஜோஹன்பர்க் - தென்னாப்பிரிக்கா
இந்த நகரங்களுக்கு அருகில் விண்கலம் விழும். ஆனால் இந்த நகரத்தில் விழாது. எனவேதான் அச்சம் எழுந்திருக்கிறது. நல்ல வேளை இந்தியா இதிலிருந்து தப்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications