தோழியும் வேணும்.. அவரோட அப்பாவும் வேணும்.. அமெரிக்காவில் ஒரு மூன்று முடிச்சு!
மகளின் தோழியை அமெரிக்க தந்தை ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
பீனிக்ஸ், அரிஸோனா, அமெரிக்கா: நம்ம "அபூர்வ ராகங்கள்" படம் அமெரிக்காவரை ஃபேமஸ் ஆயிடுச்சு போல. மகளுடைய தோழியை அப்பாவே கல்யாணம் பண்ணிக்கிட்டார். இதுதான் கதை... சாரி.. செய்தி!!
அமெரிக்காவை சேர்ந்த நெருங்கிய தோழிகள் டெய்லர் - அமண்டா. ஒரே இடத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். அமண்டாவின் தந்தை லெய்மன் டெய்லருக்கு அறிமுகமானார். தந்தை வயது 54, டெய்லர் வயது 27. சரியாக பாதிக்கு பாதி வயது குறைவு.

யாரும் ஏற்கவில்லை
வெறும் அறிமுகமானது நட்பானது... நட்பு காதலானது... காதல் எதிர்ப்பை தர தொடங்கியது. இருவரின் காதலும் இரு வீட்டுக்கும் தெரிய வர, இரண்டு வீட்டிலும் ரணகளம்தான்!! யாருமே இதற்கு ஒத்து கொள்ளவில்லை.

பச்சைக்கொடி
ஆனால் அமண்டா மட்டும் தடுமாறினாள். அப்பாவும் வேணும், தோழியும் வேணும்... இரண்டு பேரையுமே விட்டு தர முடியவில்லை. ஆனால் காதல் ஜோடி பிடிவாதமாகவே இருந்தார்கள்.கடைசியில் அமாண்டா காதலர்களுக்கு பச்சை கொடி காட்டி விட்டார்! பிறகு மகளே அப்பாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.

ஐ டோன்ட் கேர்
இது பற்றி டெய்லர் சொல்லும்போது, "என்னவோ தெரியவில்லை, முதல்முதலா பார்த்தப்போ என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சார். வயது வித்தியாசம் எல்லாம் என் கண்ணுக்கு தெரியவே இல்லை. எனக்கு யாரை பத்தியும் கவலை கிடையாது, யார் என்ன சொன்னாலும் காதிலும் போட்டு கொள்ள மாட்டேன். என் தோழி அமண்டா என்னை புரிஞ்சிக்கிட்டாள். எனக்கு அதுவே போதும். என்ன ஒன்னு, எங்களை பார்க்கறவங்க எல்லாரும் அப்பா - பொண்ணு-ன்னு நினைச்சுக்குறாங்க. அதான்...பட் ஐ டோன்ட் கேர்" என்கிறார்.

காதில் புகை
அதேபோல, புதுமாப்பிள்ளை லெய்மன் சொல்லும்போது, டெய்லர் எனக்கு மனைவியில்லை, பெஸ்ட் ஃபிரண்ட். என் மகள் எங்களை ஏற்று கொண்டதே போதும், எங்களுக்கு யாரை பத்தியும் கவலை இல்லை" என்றார். 'இதையேதான் அந்த டெய்லரும் சொன்னாரு'!! 27 வயசு இளம் பெண்ணை 54 வயது நபர் கல்யாணம் பண்ணிக்கிட்ட சம்பவத்துக்கு பிறகு நிறைய அமெரிக்க இளைஞர்களின் காதில் புகை வந்து கொண்டிருக்கிறது!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications