புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு!
டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே ஜப்பானின் நோடா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஜப்பான் நாட்டின் நோடா நகரில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நோடாவில் இருந்து கிழக்கே 91 கிமீ தொலைவிலும், நிலநடுக்கத்தின் ஆழம் 19.3 கிமீ என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது.

ஜப்பானில் புத்தாண்டுக்கு சற்று முன்பு இரவு 11.26 மணிக்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது ஏதேனும் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதேபோன்று திபெத்தில் இன்று ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக லேசான நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி ஜப்பானில் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் நாட்டின் வடகிழக்கு கடற்கரையை 3 மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி தாக்கக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது. ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மேலும் பல துறைமுகங்களில் 20 முதல் 70 செ.மீ உயரத்தில் சுனாமிகள் காணப்பட்டதாக ஜே.எம்.ஏ தெரிவித்துள்ளது.
உலகின் மிக அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அங்கு குறைந்தது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு நிலநடுக்கம் ஏற்படுகிறது. பசிபிக் படுகையைச் சுற்றியுள்ள எரிமலைகள் மற்றும் கடல் அகழிகளின் "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ள ஜப்பான், உலகின் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களில் சுமார் 20% ஐ ஏற்படுத்துகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications