எப்படி விளையாடுறதுன்னு செஞ்சு காமிச்சே 11 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் சுட்டிப்பையன்!
விளையாட்டுப் பொருட்களை வைத்து எப்படி விளையாடுவது அது எவ்வாறு செயல்படுகிறது என்று செய்து காண்பித்தே இந்த 6 வயது சிறுவன் யூடியூப்பில் 11 மில்லியன் டாலர் வரை சம்பாதிக்கிறார்.
Recommended Video

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ரெயான் போர்ப்ஸ் பட்டியலில் 2017ம் ஆண்டில் யூடியூப்பில் அதிக வருமானம் பெறுபவராக கண்டறியப்பட்டுள்ளார்.
புதுப்புது முயற்சிகளை செய்து இணையதளத்தில் வீடியோவாக பதிவு செய்பவர்களுக்கு யூடியூப் தனி பிளாட்பார்ம் உருவாக்கித் தருகிறது. நீங்கள் பதிவிடும் வீடியோ பலரது விருப்பமாக இருந்தால் உடனடியாக யூடியூப் உங்களைத் தொடர்பு கொண்டு தனி சேனலாக அதனை உருவாக்கச் சொல்லி உங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி, விளம்பரம் என அனைத்து உதவியும் செய்யும்.
2017ம் ஆண்டில் யூடியூப் சேனல்கள் மிகப் பிரபலமானதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். முதலீடு வேண்டாம், பெரும் பொருட்செலவு வேண்டாம், வித்தியாசமான சிந்தனை அதிக பார்வையாளர்கள் இருந்தால் போதும் நீங்க ஜெயித்து விடலாம்.

என்ன செய்தார் ரெயான்?
அப்படித் தான் இந்த 6 வயது சிறுவன் ரெயானும். பொதுவாக குழந்தைகள் என்றாலே பொம்மைகளுடன் விளையாடப் பிரியப்படுவார்கள். அதையே தான் இந்த ரெயானும் செய்துள்ளார்.

விளையாட்டு பொருட்கள் பற்றி விமர்சனம்
ஆனால் குடும்பத்தினரின் உதவியுடன் விளையாட்டு பொருட்களை வைத்து எப்படி விளையாடுவது என்று விளக்கத்தோடு செய்து காட்டுவது தான் ரெயானின் ஸ்பெஷல். சொல்லப்போனால் ஒரு சினிமா பார்த்துவிட்டு படம் நல்ல இருக்கா இல்லையா என்று விமர்சனம் சொல்வர்கள் இல்லையா அதைப் போலத் தான் இதுவும் ஒரு வகை ரிவ்யூ.

குழந்தையின் விமர்சனம்
ரெயானின் டாய்ஸ் ரிவ்யூ சேனல் தொடங்கும் போது அந்த சிறுவனுக்கு 4 வயது தானாம். இவருடைய யூடியூப் சேனலில் புதிய பல விளையாட்டு பொருட்களின் விமர்சனங்கள் உள்ளன. குழந்தைகளுக்காக குழந்தையே விளையாட்டுப் பொருட்களை பற்றி விமர்சிப்பது தான் இந்த சேனலின் கான்செப்ட்.
ஸ்டாரான ரெயான்
ஜெயின்ட் எக் சர்ப்ரைஸ் என்று ரெயான் செய்த விமர்சனம் தான் அவரை யூடியூப் ஸ்டாராக்கியுள்ளது. அந்த வீடியோவிற்கு மட்டுமே சுமார் 800 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்தனராம்.
போர்ப்ஸ் பட்டியல்
மொத்தத்தில் தற்போதைய நிலையில் ரெயான் யூடியூப் சேனலுக்கு 10 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனராம். இதே போன்று ஃபோர்ப்ஸ் சர்வதேச அளவில் எடுத்த பட்டியலின் படி யூடியூப்பின் அதிக சம்பளம் பெறும் 2017ம் ஆண்டு ஸ்டார்களில் 6 வயது ரெயானும் ஒருவர்.












Click it and Unblock the Notifications