ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 65 வயது மூதாட்டி
பெர்லின்: ஜெர்மனியில் 65 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆசிரியையான ஆன்கிரெட் ரவ்னிக்(65). அவருக்கு 13 குழந்தைகளும், 7 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 10 வயதாகும் அவரது கடைசி மகள் அவரிடம் விளையாட தம்பி அல்லது தங்கச்சி பாப்பா வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து ஆன்கிரெட் உக்ரைன் சென்று செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் கர்ப்பமானார்.

கர்ப்பமாகிய 26 வாரங்களில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு 3 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 65 வயதில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற பெண் என்ற பெருமையை ஆன்கிரெட் பெற்றுள்ளார்.
முன்னதாக 2006ம் ஆண்டு ஸ்பெயினில் 66 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த மரியா டெல் கார்மன் பவ்சாதா லாரா தான் அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்று கூறப்படுகிறது.இருப்பினும் 2008ம் ஆண்டு தனது 70வது வயதில் இந்தியாவில் இரட்டைக் குழந்தைகளை பெற்ற ஓம்காரி பன்வர் தான் அதிக வயதில் குழந்தையை பெற்றெடுத்தவர் என்று சிலர் கூறுகிறார்கள்.
65 வயதில் குழந்தை பெற்றெடுத்தது பற்றி பிறர் என்ன கூறுவார்கள் என்ற கவலை தனக்கு இல்லை என்கிறார் ஆன்கிரெட்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications