70 வயது மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் தென்னை மரத்தில் ஏறிய 76 வயது தாத்தா
கோலாலம்பூர்: மலேசியாவில் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாமல் 76 வயது முதியவர் தென்னை மரத்தின் மீது ஏறிக் கொண்டு கீழே இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த சலிமின் என்ற 76 வயது முதியவருக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு 70 வயதில் மனைவி உள்ளார். குழந்தைகள், பேரக்குழந்தைகளும் உள்ளனர். அந்த முதியவரின் பேரக் குழந்தைகளுக்கும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அறையை சுத்தம் செய்வதற்காக அவரை வெளியே செல்லுமாறு அவரது மனைவி நச்சரித்துள்ளார். மேலும் சலிமினை அறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
மனைவியின் நச்சரிப்பால் கடுப்பான சலிமின் வீட்டை விட்டு வெளியே வந்தார். அங்கு இருக்கும் 9 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தின் மீது ஏறினார். இதை பார்த்த அவரது மனைவி அவரை கீழே இறங்கி வருமாறு கெஞ்சியும் அவர் கேட்கவில்லை. மரத்தை விட்டு இறங்க மாட்டேன் என்று 3 மணிநேரமாக அங்கேயே இருந்தார்.
அதன் பிறகு வேறு வழியில்லாமல் தீயணைப்பு படைக்கு போன் செய்தார் சலிமின் மனைவி. அவர்கள் வந்து சலிமினை பத்திரமாக கீழே இறக்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications