Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

77 வயசு பாட்டி செய்யுற வேலையா இது? ஷாக்கான Gen Z இளசுகள்! பாட்டியம்மா என்ன பண்ணாங்கன்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: நம்மூரில் 35 வயதை தாண்டினாலே, பலரும் டெக்னாலஜியில் பின்தங்கிவிடுகிறோம். ஆனால், ரஷ்யாவில் ஓல்கா இவனோவ்னோ எனும் 77 வயது மூதாட்டி, கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2 எனும் வீடியோ கேமில் அசத்தலான சாதனையை படைத்திருக்கிறார்.

'கவுண்டர்-ஸ்ட்ரைக் 2 CS2' என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட வரலாறு கொண்ட ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர் வீடியோ கேம் தொடரின் புதிய எடிஷன் ஆகும். இது இரண்டு அணிகளுக்கு இடையேயான சண்டையை அடிப்படையாகக் கொண்டது. முதல் அணியின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெடி குண்டைப் பதிப்பது அல்லது பணயக்கைதிகளைப் பிடிப்பதாகும்.

gamer video game

இரண்டாவது அணி வெடிகுண்டைப் பதிய விடாமல் தடுப்பது அல்லது பதியப்பட்ட குண்டை செயலிழக்கச் செய்வது அல்லது பணயக்கைதிகளை மீட்பது ஆகும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், ஒரு அணியின் அனைத்து வீரர்களையும் மற்ற அணி வீழ்த்தினாலோ அல்லது இலக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டாலோ அந்தச் சுற்றில் அந்த அணி வெற்றி பெறும்.

இந்த கேமில், ஒரு சுற்றில் ஒரு வீரர் மட்டும், எதிரணியில் உள்ள அனைத்து 5 வீரர்களையும் தனியாக வீழ்த்தினால், அது 'ஏஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதான மற்றும் பாராட்டப்படும் சாதனையாகும். 77 வயதில் ஓல்கா எனும் பாட்டி இந்த சாதனையை செய்திருப்பது சோஷியல் மீடியாக்களில் இளசுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தச் சாதனைக்காக 77 வயது ஓல்கா பாட்டி, NNYS பரிந்துரையை பெற்றிருக்கிறார். அதாவது தனது அசாதாரணச் சாதனைக்காக, சிறந்த கேமர் அல்லது ஸ்ட்ரீமர் என்ற பிரிவின் கீழ் ஒரு விருதுக்கு பாட்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பாட்டி எதிர் அணில் உள்ள 5 பேரையும் போட்டு தள்ளியது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து அந்த பாட்டி கூறுகையில், "ஓய்வுக்காலத்தில் பொழுதுபோக்கிற்காக கடந்த 2021 முதல் இந்த கேமை நான் சோஷியல் மீடியாக்களில் ஸ்ட்ரீமிங் செய்ய தொடங்கினேன். தற்போது பாட்டிக்க 2.4 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+