தாத்தாவுக்கு நேரம் சரியில்லை.. 78 வயசு.. பொண்ணுக்கு 17 வயசுதான்.. "அந்த" 22 நாளில் எல்லாம் போச்சு!
இந்தோனேஷியாவில் 17 வயது சிறுமியை 78 வயது முதியவர் விவாகரத்து செய்துள்ளார்
ஜகார்த்தா: 78 வயசு தாத்தா, 17 வயசு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.. என்ன ஆனதோ தெரியவில்லை.. திடீரென 22 நாட்களில் டைவர்ஸ் செய்துவிட்டார்கள்!
இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது.. பொதுவாக அந்த தீவில் நடக்கும் கல்யாணம் என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல்தான்.. ஒரே மேடையில் 2 பெண்களை கல்யாணம் செய்த சம்பவம் உண்டு... கட்டினால் 17 வயது சிறுவனை தான் கட்டுவேன் என்று அடம்பிடித்த 71 வயது பாட்டியும் உண்டு!

இப்போதும் அப்படியேதான் ஒரு கல்யாணம் நடந்தது.. மாப்பிள்ளைக்கு வயசு 78, பொண்ணுக்கு வயசு 17.. இரு வீட்டிலும் விரும்பியே திருமணத்தை செய்துவைத்தனர்.. அபா சர்னா என்பது அந்த தாத்தாவின் பெயர்.. மனைவி பெயர் நோனி நவிதா.
இவர்கள் திருமணம் நடந்தபோதே உலக மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.. யார் கண்ணு பட்டதோ ஒரு மாசம் கூட ஆகவில்லை.. அதற்குள் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போய்விட்டார் கல்யாண பெண். வெறும் 22 நாட்களில், கணவனை பிரிந்ததுடன், தன்னுடைய டைவர்ஸ் பேப்ரையும் மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

ஆனால், இவர்களுக்குள் ஒரு சண்டையும் இல்லையாம், சச்சரவும் இல்லையாம்.. சந்தோஷமாகத்தான் இருந்தார்களாம்.. ஆனால், யாரோ வேண்டாதவர்கள் பெண்ணின் மனசை ஏதோதோ சொல்லி குழப்பி விட்டதாக கூறப்படுகிறது.. நோனி கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாக இருந்ததாக ஒரு புது புகாரும் முளைத்துள்ளது. இது உண்மையா என்று தெரியவில்லை.
நம்ம ஊர் போல இல்லை.. அங்கே மணமகன்தான் மணமகளின் குடும்பத்திற்கு வரதட்சணை தருவார்களாம்.. இப்போது டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதும், அந்த வரதட்சணை பொருட்கள் ஒரு டிரக் மூலம் திருப்பி கொண்டு செல்லப்பட்டன... அந்த போட்டோக்கள்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications