78 வயதிலும் மறையாத காதல்.. பள்ளி பருவ தோழிக்கு 60 வருஷம் கழித்து ப்ரபோஸ் செய்த முதியவர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: காதலுக்கு கண் மட்டும் இல்லை, வயதும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் 63 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலர்ந்துள்ளது. 96 பட பாணியில் நடைபெற்ற இந்த காதல் கதை பற்றிய சுவாரசிய தகவலை இதில் காணலாம்.

காலங்களை கடந்தது காதல் என்று சொல்வதுண்டு.. எத்தனை வருடங்கள் ஆனாலும் இளம் வயதில் மனதில் பூத்த காதலை ஒருநாளும் மறக்க முடியாது. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது காதல்.. அது முற்றிலும் உணர்வுப்பூர்வமானது. உள்ளூர் சினிமாக்கள் முதல் உலக சினிமா வரை காதலை வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளன. காதலை தத்ரூபமாக பல படங்களில் காட்டப்பட்டு இருக்கும்.

78 year old man who proposed his high school cruss after 63 year of separation

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் பள்ளி பருவ காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பார்கள். சினிமாவில் மட்டும் இல்லை நிஜத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கு என்பதை வெளிக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த சுவாரசிய தகவலை பார்க்கலாம்:-

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் தாமஸ் மெக்மேகின் மற்றும் நான்சி கம்பேல். பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு இருந்துள்ளது. ஆனால், இருவருமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்துள்ளார்கள். பிரேமம் படம் ரேஞ்சுக்கு பள்ளி பருவத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தாலும் காதலை வெளிப்படுத்தாமல் இருந்துள்ளனர்.

78 year old man who proposed his high school cruss after 63 year of separation

பள்ளி படிப்பு முடித்ததும் இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு கல்லூரி முடித்து திருமணம் என இருவரும் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனாலும் இளம் வயதில் ஏற்பட்ட அந்த காதல் மனதிற்குள் அப்படியே இருந்துள்ளது. பல வருடங்கள் கழித்து பள்ளி படிப்பு முடித்து 50 வது ஆண்டில் மீண்டும் படித்த மாணவர்கள் எல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு பிறகு மேக்மேகினும் நான்சி கம்பெல்லும் சந்தித்து இருக்கிறார்கள்.

அப்போது இருவரும் பள்ளி பருவ காலத்தை பற்றி பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளனர். ஆனால், அப்போது இருவருக்குமே தனித்தனியே குடும்பம் என செட்டில் ஆனதால் வேறு எதுவும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. பிறகு வழக்கம் போல் நிகழ்ச்சி முடிந்து பிரியா விடை கொடுத்து சென்றுவிட்டனர். 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் 60 வது ரியூனியன் நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்து இருக்கிறார்கள்.

78 year old man who proposed his high school cruss after 63 year of separation

இப்போது இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததால் இருவருக்குமே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. ஆனால் பள்ளி ரியூனியன் நிகழ்ச்சியில் பெரிதாக இதைப்பற்றி சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் மெக்மேகின் தனது காதலை எப்படியாவது வெளிப்படுத்தியிட வேண்டும் என்று எண்ணியிருக்கிறார்.

இதற்காக தம்பா விமான நிலையத்திற்கு கம்பெல்லை வர சொன்ன மெக்மேகின் சர்பிரஸ் கொடுக்கும் விதமாக தனது காதலை புரபோஸ் செய்தார். இளம் காதல் ஜோடிகள் போல தனது காதலை மெக்மேகின் வெளிப்படுத்தியது இணையதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதல் மறைந்து போகாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்று பாரட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+