சீனாவை தனிமைப்படுத்த திட்டம்.. உலக அளவில் இணையும் 8 நாடுகள்.. லிஸ்டை பார்த்து ஷாக்கான ஜிங்பிங்!
பெய்ஜிங்: சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்த 8 நாடுகள் முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் இருக்கிறது. வைரஸ் குறித்த தகவலை சொல்லாமல் இருந்தது. பொருளாதார சரிவுக்கு காரணமாக இருந்தது. பொருளாதார சரிவை காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்த நிறுவனங்களை வாங்கியது என்று சீனா மீது பல நாடுகள் கோபத்தில் இருக்கிறது.
முக்கியமாக சீனா மீது அமெரிக்கா கடுமையான கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

8 நாடுகள்
சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்த 8 நாடுகள் முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி, யுகே, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகள் இதில் ஒன்றாக சேர்ந்து உள்ளது.

முதல் விஷயம் என்ன
சீனாவிற்கு எதிராக இந்த 8 நாடுகளின் அரசியல்வாதிகள் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள். அதன்படி முதலாவதாக உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவது, monopoly என்று சீனாவின் நிறுவனங்கள் தனித்து இயக்குவது ஆகியவற்றை எதிர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது விஷயம்
அடுத்ததாக சீனாவின் ராணுவம் அண்டை நாடுகளின் எல்லையில் அத்துமீறுவது, தென் சீன கடல் எல்லையில் அத்துமீறுவது ஆகிய பணிகளை தடுக்க வேண்டும் என்று இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது . சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது அத்துமீறி வருகிறது. இதை மொத்தமாக தடுக்க வேண்டும். சீனாவின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங் பிரச்சனை
அதேபோல் ஹாங்காங் பிரச்சனையில் சீனாவின் செயலை தடுக்க வேண்டும். ஹாங்காங்கை சீனா மொத்தமாக கட்டுப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. சீனா இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகிறது. ஆனால் சீனா ஹாங்காங்கிற்கு கொடுத்த வாக்கை மீறி விட்டது. இதனால் ஹாங்காங்கில் அமைதியை கொண்டு வரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

அழுத்தம்
அதேபோல் சீனா மற்ற நாடுகளுடன் நட்பாக இருப்பதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனா தற்போது ரஷ்யா, தென் கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நட்பாக இருக்கிறது. சீனாவின் இந்த உறவுகளை கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்க வேண்டும். உலக அளவில் சீனாவை தனித்து விட வேண்டும் என்று இந்த 8 நாட்டு அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளனர்.இந்த குழுவில் ஜப்பான், யுகே ஆகிய நாடுகள் இருப்பது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications