அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 2வது பயங்கரம்.. 9 பேரை சுட்டுக்கொன்ற இன்னொரு மர்மநபர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் டேடான் நகரில் மர்ம மனிதன் 9 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக டெக்சாஸின் எல் பசோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள நகரம் டேடான். இங்கு மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 16 குண்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய மர்ம மனிதனும் உயிரிழந்தான்.

மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து காயமடைந்தவர்களை உடனே அருகில் இருந்து மியாமி வேலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் நிலைகுறித்து இதுவரை தெளிவான தகவல் தெரியவில்லை. தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே அமெரிக்காவின் டேடான் போலீசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரிகான் மாவட்டத்தின் டேடன் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. எனவே அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

உதவி வேண்டினால்
மேலும் டேடான் நகர போலீசார், இது தொடர்பாக ஏதேனும் பொதுமக்களுக்கு உதவி தேவைப்பட்டால் தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

20 பேர் சுட்டுக்கொலை
முன்னதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகாணம் எல் பசோவில் அமைந்துள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் 20 பேரை சுட்டுக்கொன்றார். மேலும் 25 பேரை படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

29 பேர் சுட்டுக்கொலை
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications