லண்டன்: தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து 90 பேர் படுகாயம்
லண்டன்: லண்டனில் திரையரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 90 பேர் படுகாயமடைந்தனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வெஸ்ட் எண்ட் தியேட்டர் மாவட்டத்தில் 112 ஆண்டு கால பழமையான அப்போலோ என்ற திரையரங்கம் உள்ளது.
1901-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திரையரங்கம், 4 தளங்களுடன் பால்கனி உள்பட 755 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கும் வசதி கொண்டது.
சமீபத்தில் ரிலீசான ஓர் ஆங்கில படத்தை வியாழக்கிழமை மாலை இந்த திரையரங்கில் அமர்ந்து சுமார் 720 பேர் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, நான்காவது மாடியின் பால்கனி பகுதியில் உள்ள ஃபால்ஸ் சீலிங் திடீரென பெயர்ந்து விழுந்தது. அதன் கணம் தாங்காமல் மூன்றாவது மாடியின் தரை பகுதி இடிந்து நொறுங்கி, இரண்டாவது மாடி கூரையின் மீது விழுந்தது.
பயங்கர சத்தத்துடன் தளம் நொறுங்கி தங்கள் மீது விழுந்ததால் சுவாரஸ்யமாக படத்தை ரசித்துக் கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர்.
பெண்களும் குழந்தைகளும் பயத்தில் அலறி கூச்சலிட்டபடி உயிரை காப்பாற்றிக் கொள்ள இருட்டில் அங்கும், இங்கும் ஓடினர்.
இதனால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓடிய வேகத்தில் பலர் கீழே விழுந்தனர். பின்னால் ஓடிவந்த பலர் அவர்களை மிதித்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடினர். ஆவலாக படம் பார்க்க வந்த மக்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு பயந்து வெளியே ஓடினர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications