அம்மாவின் கடைசி ஆசை: 90 வயது அப்பாவுக்கு மறுமணம் செய்து வைத்த பிள்ளைகள்
பெய்ஜிங்: மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது 90 வயதில் மறுமணம் செய்து கொண்டுள்ளார் சீனத் தாத்தா ஒருவர். நோய்வாய்ப் பட்டு மரணப் படுக்கையில் இருந்த தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது பிள்ளைகள் முன்னின்று இத்திருமணத்தை நடத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் படிக் அல் தகாபி என்ற 90 வயது தாத்தா. இவருடைய மனைவி நீண்ட நாட்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு அண்மையில் காலமானார்.
மரணப்படுக்கையில் இருந்தப்போது, தனது கடைசி ஆசையாக ‘தான் இறந்தப்பிறகு தனது கணவருக்கு கண்டிப்பாக மறுமணம் செய்துவைக்க வேண்டுமென' பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளார் இவரது மனைவி.
இது நடந்த சில நாட்களிலேயே தகாபியின் மனைவி இறந்து விட்டாராம். இதையடுத்து இறக்கும் தருவாயில் தாய் சொன்னதை நிறைவேற்றவேண்டுமென்ற எண்ணத்தில் தகாபியின் பிள்ளைகள் செயலில் இறங்கியுள்ளனர்.
ஒரு வழியாக மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற எண்ணி தகாபியும் மறுமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். இதையடுத்து 53 வயது விதவைப் பெண் ஒருவரை வரதட்சணைக் கொடுத்து தங்கள் தந்தைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் பிள்ளைகள்.
உறவினர்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடைபெற்றது அவர்களது திருமணம். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறி மனநிறைவு அடைந்துள்ளனர் தகாபியின் ஐந்து மகள்களும், ஏழு மகன்களும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications