உண்மையான காதலை நீ உணர முடியாது கண்ணே... மரணப்படுக்கையில் 93 வயது மனைவி.. பாடி மகிழ்வித்த கணவர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மரணப் படுக்கையில் கிடக்கும் 93 வயது மனைவியை மகிழ்விக்க அவரது காதல் கணவர் காதல் பாட்டுப் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த 92 வயது முதியவர் ஹோவார்ட் செரேனாடெட். இவரது மனைவி லாரா (93). பல ஆண்டுகளாக தம்பதிகளாக சேர்ந்து வாழும் இத்தம்பதி பேரன், பேத்திகளோடு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் லாராவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லாராவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இறுதிகாலம் நெருங்கி விட்டதாகத் தெரிவித்தனர்.

உண்மையான காதலை நீ உணரவே முடியாது....

உண்மையான காதலை நீ உணரவே முடியாது....

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லாரா, தனது கணவரை மகிழ்விக்க காதல் பாடல் ஒன்றை பாட முயன்றார். அந்தப் பாடலானது இரண்டாம் உலகப்போரின்போது ஹோவார்ட் போர்க்களத்தில் கடமையாற்றச் சென்றபோது, தனக்கு மிகவும் பிடித்த காதல் பாடலான- ரோஸ்மேரி குளூனியின் ‘உண்மையான காதலை நீ உணரவே முடியாது' என்னும் பொருள்படும் (You'll Never Know Real love) பாடலை பாடி தனது, ஏக்கத்தையும், தனிமையையும் லாரா தணித்துக் கொள்ள உதவியது.

முணுமுணுப்பு...

முணுமுணுப்பு...

ஆனால், தற்போது வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைபாடால் அந்தக் காதல் பாடலை லாராவால் பாட இயலவில்லை. அதனால், வெறும் வசனமாக மட்டும் அப்பாடலின் வரிகளை அவர் முணுமுணுத்தார்.

உன் கண்ணில் நீர் வடிந்தால்...

உன் கண்ணில் நீர் வடிந்தால்...

இதைக்கண்ட ஹோவார்ட், செல்லமாக மனைவியின் கன்னத்தை வருடிக் கொடுத்தபடி, மீதிப் பாட்டை ராகத்துடன் பாடி முடித்தார். இந்த தம்பதியரின் அன்னியோன்யத்தையும், பாசத்தையும் கண்டு அங்கு கூடியிருந்த உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

வீடியோ...

வீடியோ...

இந்த நெகிழ்ச்சியான காட்சியை அவர்களின் பேத்திகளில் ஒருவரான எரின் சோலாரி வீடியோவாக படமெடுத்து, கடந்த 12-ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவை இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

லைக்ஸ்....

லைக்ஸ்....

விவாகரத்துக்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில் இது போன்று வயோதிகத்திலும் ஒருவருக்கொருவர் காதலுடன் வாழும் இந்தத் தம்பதிக்கு இதுவரை 56 ஆயிரம் லைக்குகளும் 74ஆயிரம் ஷேர்களும் குவிந்துள்ளனர்.

டிஸ்சார்ஜ்...

இந்த சம்பவத்துக்கு பின்னர் உடல்நலம் தேறி லாரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாக எரின் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+