”கங்கிராட்ஸ் பாட்டி, உங்களுக்கு குட்டிப் பாப்பா பொறக்கப் போகுது.. 100 வயது பாட்டிக்கு ஷாக் கொடுத்த ட
லண்டன்: லண்டனில் 100 வயதாக உள்ள பாட்டி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவமனை ஒன்று தவறான அறிக்கையை அனுப்பி அவருடைய குடும்பத்தினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் உள்ள ஹேம்ப்ஷைர் நகரில் வாழ்ந்துவரும் 100 வயதினை நெருங்கும் பெண் தனக்கு திடீர் கர்ப்பம் ஏற்பட்டதை அறிந்து திகைப்பில் ஆழ்ந்துப் போனார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவரது மூத்த மகனின் வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று குழந்தைகளின் மூலம் பிறந்த 20 பேரப்பிள்ளைகளுடன் வெஸ்ட் சூஸெக்ஸ் பகுதியில் வாழ்ந்துவரும் டோரிஸ் என்ற அந்தப் பெண்ணுக்கு ஃபரேஹாம் கம்யூனிட்டி மருத்துவமனை கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியது.
"கர்ப்பிணியான நீங்கள் வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி காலை சரியாக 9.45 மணிக்கு எங்கள் மகப்பேறியல் துறை சிறப்பு மருத்துவரை பரிசோதனைக்காக சந்திக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கர்ப்பம் தொடர்பாக எடுத்துக்கொண்ட சிகிச்சை தொடர்பான விபரங்களையும், காலையில் எழுந்தவுடன் வெளியேறிய முதல் சிறுநீரின் மாதிரியையும் வரும்போது கொண்டு வர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து திகைப்படைந்த டோரிஸ், தனது குடும்பத்தாருக்கு இந்த தகவலை சொன்னபோது அனைவரும் விழுந்து, விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பேரன், பேத்திகள் அவருக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்தனர்.
நொந்துப்போன டோரிஸ் உடனடியாக அந்த மருத்துவமனைக்குப் போன் செய்து இந்த கொடுமையைப் பற்றி விசாரித்தபோது, அதே மருத்துவமனையில் மகப்பேறு தொடர்பான சிகிச்சை பெற்று வரும் இன்னொரு டோரிஸுக்கு அனுப்பப்பட வேண்டிய அந்த கடிதம், தவறுதலாக, அங்கு சிகிச்சை பெற்று வரும் நூறு வயது டோரிஸுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்துள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.
அந்த கடிதத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கடைசி குழந்தையை பிரசவித்த டோரிஸ் "எனக்கு 99 வயதாகின்றத். இந்த வயதில் எப்படி எனக்கு கர்ப்பம் ஏற்படும் என்பதை கூட அந்த மருத்துவ நிர்வாகம் சிந்திக்க தவறிவிட்டது வேடிக்கையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications