7 திருமணத்திற்கு பின் இப்போ மறுமணத்திற்கு ரெடியான 112 வயது பாட்டி! மாப்பிள்ளை கிடைக்கல என வேதனை

Subscribe to Oneindia Tamil

மலேசியா: சுமார் 110 வயதை கடந்த மூதாட்டி ஒருவர் தனது மறுமணத்திற்கு ஆள் தேடுகிறார். ஆனால், மாப்பிள்ளை கிடைக்காத நிலையில், அவர் சோகத்தில் இருக்கிறாராம்.

பொதுவாக வெளிநாடுகளில் நாம் கற்பனைக்கும் எட்டாத பல வினோத சம்பவங்கள் நடக்கும். இப்படியெல்லாம் கூட யோசிப்பார்களா என இதுபோன்ற சம்பவங்கள் நம்மை நினைக்கத் தோன்றும்.

 A 110-year-old Malaysian woman is now looking for groom

அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. 30 கொள்ளு பேரக் குழந்தைகளுடன் 112 வயதில் இருக்கும் சிதி ஹவா ஹுசின் என்ற பாட்டி தனது மறுமணத்திற்கு மணமகன் தேவை என்று கூறுகிறார்.

112 வயது மூதாட்டி: இப்போதெல்லாம் நமக்கு 40 வயதைத் தாண்டினாலே மூட்டு வலி வந்துவிடுகிறது. வயதாக வயதாகப் பல பிரச்சினைகள் நமது உடலில் ஏற்பட்டு வருகிறார். ஆனால் இங்கே 112 வயது மூதாட்டி சிதி ஹவா என்பவர் மறுமணத்திற்கு ஆள் தேடுகிறார். இதுவரை இவருக்கு ஏழு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் மூலம் அவருக்கு நான்கு குழந்தைகளும் உள்ளன. இருந்த போதிலும் இப்போதும் அவர் எட்டாவது திருமணத்திற்கு ரெடியாக உள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இது குறித்து அந்த மூதாட்டி கூறுகையில், "எனது முன்னாள் கணவர்களில் சிலர் இறந்துவிட்டனர், மற்றவர்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நாங்கள் விவாகரத்து பெற்றோம். ஆனால், இப்போது நான் தனிமையில் இருக்கிறேன். எனக்குத் திருமணம் செய்து கொள்ள இப்போது மணமகன் தேவை" என்றார். வயது முதிர்ந்த போதிலும், சிதி ஹவா இன்னும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அவரது வேலைகளை அவரே செய்து கொள்கிறார்.

19 பேரக்குழந்தைகள்: இவருக்கு மொத்தம் 19 பேரக்குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் இப்போது தனது தனது இளைய மகன் அலி செமே (58) என்பவருடன் வசித்து வருகிறார். உணவு முறையும் தொடர்ச்சியாக வேலை செய்வதும் தான் நீண்ட காலம் வாழ ரகசியம் என்ற ஹவா, தான் எப்போதும் குழம்பு மற்றும் அரிசி சாதத்தைச் சாப்பிட்டதே இல்லை என்றார்.

இது குறித்து அந்த மூதாட்டி மேலும் கூறுகையில், "நான் ஒருபோதும் உணவைத் தவிர்ப்பதில்லை.. அதேநேரம் அதிகமாகவும் உணவை எடுத்துக் கொண்டது இல்லை. இன்னும் எனது வேலைகளை நானே தான் செய்கிறேன். இப்போது நினைவாற்றலில் சற்று பிரச்சினை இருந்தாலும் கூட இன்னும் என்னால் அனைத்து வேலைகளையும் செய்ய முடிகிறது" என்றார்.

மூதாட்டி: மலேசியாவில் தான் இந்த மூதாட்டி வசித்து வருகிறார். இவர் திருமணத்திற்குத் தயாராக இருந்தாலும் கூட மணமகன் தான் கிடைக்கவில்லை என வேதனையில் இருக்கிறார். மேலும், வயது முதிர்வால் இவருக்கு மறதி சற்று அதிகரித்துவிட்டது. இருந்த போதிலும், இப்போதும் கூட மலேசிய வரலாற்றில் எப்போது என்ன சம்பவம் நடந்தது என்பதைத் துல்லியமாக அவர் கூறுகிறார்.

இவரது கதை தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இப்போதெல்லாம் 60 வயதைத் தாண்டினாலே முடியலடா சாமி என்று இருக்கும் தலைமுறைக்கு இந்த பாட்டி மிகப் பெரிய உத்வேகத்தைத் தரும் நபராக இருக்கிறார். இவரைப் போலவே இருக்க வேண்டும் என்பதே இங்குப் பலரது விருப்பமாகவும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+