தீவை பரபரப்பாக்கிய திருமணம்:தற்கொலை மிரட்டல் விடுத்து 71வயது மூதாட்டியை கரம்பிடித்த 16வயது சிறுவன்!
இந்தோனேஷியாவில் 71 வயது மூதாட்டியை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமத்ரா தீவு: இந்தோனேஷியாவில் 71வயது மூதாட்டியை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்துள்ளான். அதிகாரிகள் தடுக்க முயற்சித்தும் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டி காரியத்தை சாதித்துள்ளது அந்த ஜோடி.
காதலுக்கு கண் இல்லை என்பதை போல காதலுக்கு வயதும் இல்லை.. வயது முதிர்ந்த ஆண்கள்தான் வழக்கமாக இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் 71 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளான் 16 வயது சிறுவன் ஒருவன். மூதாட்டியின் அன்பில் மயங்கிய சிறுவன் அவரையே திருமணம் செய்து இல் வாழ்க்கையில் இணைந்துள்ளான்.

சிறுவன் செலாமெட்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் செலாமெட். சிறுவனின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

தனிமையான சிறுவன்
இதையடுத்து சிறுவனின் தாய் வேறு ஒரு நபரை திருமணம் செய்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனால் தனிமையான சிறுவன் தன்னந்தனியாக வசித்து வந்துள்ளான்.

பக்கத்து வீட்டு பாட்டி
சமீபத்தில் சிறுவன் செலாமெட் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அப்போது அவனை பக்கத்து வீட்டில் வசிக்கும் 71 வயது மூதாட்டி ரொகாயா பின்டி என்பவர் நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாக தெரிகிறது.

காதலாக மாறிய பழக்கம்
மூதாட்டியின் அன்பும் பரிவும் செலாமெட் ரியாடியை கவர்ந்தது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.

தடுக்க முயன்ற அதிகாரிகள்
அதை தொடர்ந்து சிறுவன் செலாமெட் மூதாட்டி ரொகாயாவை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்தான். அதை அறிந்த அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர்.

தற்கொலை மிரட்டல்
தங்களது திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என காதல் ஜோடி மிரட்டியது. இதையடுத்து அதிகாரிகள் பின்வாங்கியதை தொடர்ந்து கடந்த வாரம் சிறுவனும் மூதாட்டியும் திருமணம் செய்து கொண்டனர்.

இனிதே முடிந்த திருமணம்
இந்த திருமணத்தில் மூதாட்டியின் குடும்பத்தினர் உள்பட கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிறுவனை திருமணம் செய்த மூதாட்டி எராகியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.

பரபரப்பான தீவு
இவர்களின் திருமணம் தான் தற்போது இந்தோனேசியா முழுவதும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் மூதாட்டி மற்றும் சிறுவனின் திருமணத்தால் சுமத்ரா தீவு நிலநடுக்கத்துக்கு சமமான பரபரப்பை அடைந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications