சொக்கா.. சொக்கா.. ஒரே வாரத்தில் ரூ.4¼ கோடி பரிசு.. அமெரிக்க பெண்ணுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்த பாருங்க!
அமெரிக்காவில் ஒரே வாரத்தில ஒரு பெண்ணுக்கு நான்கேகால் கோடி ரூபாய் பரிசு லாட்டரியில் விழுந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே வாரத்தில் ஒரு பெண்ணுக்கு 2 முறை லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. இதனால் ஒரு வாரத்திலேயே அவர் கோடீஸ்வரி ஆகியுள்ளார்.
ஒருவருக்கு நேரம் வந்தால் கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்பார்கள். இந்த பழமொழி அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அசால்ட்டாக பொருந்தியுள்ளது.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் இளம் பெண் திணறி போயுள்ளார். லாட்டரியில் வந்த பணத்தைக் கொண்டு தனக்கு பிடித்த விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்க இருப்பதகா கூறியுள்ளார்.

அதிர்ஷ்டத்தை சோதிக்க..
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ரோசா டோமின்கியூ. இவர் கடந்த வாரம் தனது அதிர்ஷ்ட்டத்தை சோதித்து பார்க்க எண்ணினார்.

5 டாலர்களுக்கு லாட்டரி
இதற்காக அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு லாட்டரி கடையில் தனது 5 டாலர்களை கொடுத்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். இதற்கான பரிசுத்தொகை 5 லட்சத்து 55 ஆயிரம் டாலர் ஆகும்.

2 நாள் இடைவெளியில் மீண்டும்
அதன்பின்னர் 2 நாள் இடைவெளியில் கலிபோர்னியாவின் கேஸ் ஸ்டேஷன் பகுதியில் மீண்டும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். இதனுடைய பரிசுத்தொகை 1 லட்சம் டாலர்.

அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்
இந்த நிலையில் அவர் வாங்கிய 2 லாட்டரி சீட்டுகளுக்கும் அவருக்கு பரிசு கிடைத்தது. இதன் மூலம் அவர் 6 லட்சத்து 55 ஆயிரம் டாலருக்கு சொந்தக்காரர் ஆனார்.

நான்கேகால் கோடி
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 4 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரே வாரத்தில் 2 லாட்டரி சீட்டுகளில் பரிசு பெற்றதன் மூலம் கோடீஸ்வரி ஆகியுள்ளார் ரோசா.

கார் வாங்க போறாராம்
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ரோசா டோமின்கியூ என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடியுள்ளார். தனக்கு கிடைத்திருக்கும் பணத்தை கொண்டு தான் மிகவும் விரும்பும் கார் ஒன்றை வாங்க முடிவு செய்து உள்ளதாக கூறியுள்ளார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications