85 வயது முதியவரை கரம்பிடித்த 24 வயது காதலி.. சீக்கிரமே குட் நியூஸ் சொல்ல போகிறார்களாம்?.. எப்புட்றா
அமெரிக்கா: அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவர் தன்னைவிட 61 வயது முதியவரான 85 வயதான முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜாதி, மதம், நாடு இவற்றை எல்லாம் கடந்ததுதான் காதல். காதலுக்கு கண்கள் இல்லை என்பார்கள். காதலுக்கு கண்கள் மட்டுமில்லை வயதும் இல்லை என்று நிரூபிக்கும் சம்பவம் ஒன்றுதான் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சொந்த தாத்தாவைவிட பத்து வயது அதிகமான முதியவரை திருமணம் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதில், கூடுதல் குட் நியூஸ் என்னவென்றால் இவர்கள் இருவரும் இணைந்து சீக்கிரமே அழகான குழந்தையைப் பெற்றெடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம். வாங்க என்னவென்று தெரிந்து கொள்ளலாம்...
அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாகாணத்தில் வசித்து வருபவர் மிராக்கிள் போக் என்ற 24 வயது இளம்பெண். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டன்று ரியல் எஸ்டேட் ஏஜென்டாக உள்ள சார்லஸ் 85, என்பவரை சந்தித்துள்ளார். அன்று முதலே இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் சார்லஸ் மீது மிராக்கிள் போக் காதல் வயப்பட்டுள்ளார்.
தன்னுடைய வயதை ஒப்பிடும்போது 61 வயது பெரியவராக இருந்தபோதிலும் தான் விரும்பிய காதலனான சார்லஸையே கணவராகத் தேர்ந்தெடுத்தார் மிராக்கிள். இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் மிராக்கிளின் சொந்த தாத்தவைவிட சார்லஸுக்கு 10 வயது அதிகம் என்பதுதான். தனது காதல் குறித்து சார்லஸிடம் மிராக்கிள் கூறிய நிலையில், சார்லஸும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
இந்நிலையில் தங்களது இருவரின் காதல் குறித்தும் தனது குடும்பத்திடம் மிராக்கிள் கூறிய நிலையில் அவர்களது குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். என்ன ஆனாலும் சரி தனது காதலன் சார்லஸைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் அப்பெண். இதையடுத்து, இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு செம்ம ஹாப்பியாக திருமணம் செய்துள்ளனர்.
இதில் கூடுதல் குட் நியூஸாக இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராகியுள்ளனர். ஐவிஎஃப் எனும் செயற்கை முறையில் கருத்தரித்தல் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள தயாராகியுள்ளார் மிராக்கிள். இந்த காதல் தம்பதியின் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 10 வயது, 20 வயது அதிகம் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்த பலரைப் பார்த்திருப்போம்.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த இப்பெண் தனது தாத்தவைவிட பத்து வயது அதிகமான முதியவரை காதலித்து கரம் பிடித்துள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகவில்லை என்று கொதித்துக் கொண்டிருக்கும் 90's கிட்ஸ் பலரும் தங்களது மனக் குமுறல்களை சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications