தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகள்... 5 வயது ‘குட்டி அர்னால்டு’க்கு குவியும் பாராட்டுகள்!

தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகள் புரிந்துள்ளான் 5 வயது சிறுவன் ஒருவன்.

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன், தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகள் புரிந்துள்ளான்.

ரஷ்யாவின் செசென் குடியரசில் மழலையர் பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் ரகிம் குரேயெவ். தண்டான் எடுப்பதில் குட்டி அர்னால்டாக திகழ்பவன்.

இந்த சிறுவன் தற்போது தண்டால் எடுப்பதில் 6 உலக சாதனைகளை படைத்துள்ளான். அதாவது, 40 நிமிடங்கள் 57 வினாடிகளில் ஆயிரம் தண்டாலும், ஒரு மணி நேரம் 30 நிமிடங்களில் 2000 தண்டால்களும் எடுத்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான் ரகிம்.

ஐந்து சாதனைகள்:

ஐந்து சாதனைகள்:

இந்த இரண்டு சாதனைகளை தொடர்ந்து மூன்றாவதாக ஒரு மணி நேரத்தில் 1419 தண்டால்கள் எடுத்தான் ரகிம். அதனை தொடர்ந்து 2 மணி நேரத்தில் 2559 தண்டாலும், 2 மணி நேரம் 22 நமிடங்கள் 09 விநாடிகளில் 3000 தண்டால்களும் எடுத்து ஐந்து சாதனைகள் படைத்தான்.

பரிசு:

பரிசு:

அதேபோல தொடர்ந்து 3,202 தண்டால் எடுத்து மற்றொரு சாதனையையும் ரகிம் படைத்துள்ளான். எல்லாம் சேர்த்து மொத்தம் ஆறு உலக சாதனைகளை முறியடித்துள்ளான் இந்த குட்டி அர்னால்ட். ரகிமின் இந்த சாதனையை பாராட்டி மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. மேலும், பொம்மை கடைக்கு சென்று அவனுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கோளாறு:

வீடியோ கோளாறு:

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் போது 2 மணி நேரம் 25 நிதிடங்களில் 4105 தண்டால்கள் எடுத்துள்ளான் ரகிம். ஆனால் அப்போது வீடியோ பதிவில் ஏற்பட்ட கோளாறால், அவனது சாதனை பதிவு செய்ய முடியாமல் போனது.

புதினின் பாராட்டு:

புதினின் பாராட்டு:


ஆனால் துவண்டுவிடாத ரகிம் மீண்டும் முயற்சி செய்து தற்போது ஆறு சாதனைகளை படைத்துள்ளான். இதற்காக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் பாராட்டுக்களை ரகிம் பெற்றுள்ளான என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+