"ஆணுறுப்பை" கட் பண்ணிட்டாராம் அந்த டாக்டர்.. காரணம் கேட்டால் ஆடிப்போயிடுவீங்க.. துடிதுடித்த தாத்தா
தவறான ஆப்ரேஷனால் ஆணுறுப்பை இழந்த முதியவர் மருத்துவமனை மீது வழக்கு தொடுத்திருக்கிறார்
ரோம்: இத்தாலியில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் ஆண் உறுப்பில் உள்ள கட்டியை அகற்றுவதற்கு பதிலாக ஆணுறுப்பை வெட்டி அகற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் மருத்துவ தவறுகள் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் சுமார் 5% பேர் இந்த மருத்துவ தவறுகளால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் இத்தாலியில் அரங்கேறியுள்ளது. டஸ்கனி பகுதியில் அரேஸ்ஸோ எனும் இடத்தில் அமைந்துள்ள சான் டொனாடோ மருத்துவமனையில் ஒரு 60 வயது முதியவர் ஒருவர் அட்மிட் ஆகியிருக்கிறார்.
இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருக்கிறது. தொடக்கத்தில் மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து சென்றுக்கொண்டிருந்த முதியவர், ஒரு கட்டத்தில் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார். எனவே உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்திருக்கிறது. டாக்டர்களும் சுழற்சி முறையில் இவருக்கு சிகிச்சையளித்து வந்துள்ளனர். இப்படியே எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்த நிலையில், நைட் ஷிப்டில் 30 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் வந்திருக்கிறார்.

கட்டி
அவரும் எல்லா மருத்துவரை போலவே முதியவரின் உடல் முழுவதும் பரிசோதித்திருக்கிறார். அப்போது முதியவர் தனக்கு சிறுநீர் கழிப்பதற்கு சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து ஓரிரு வாரங்களாக இதே புகாரை கூறிய நிலையில் நைட் ஷிப்ட் வந்த டாக்டர் அடுத்த நாள் பகல் ஷிப்டில் வரவே இந்த புகார் குறித்து பரிசோதனை செய்திருக்கிறார். பரிசோதனையில் முதியவருக்கு ஆணுறுப்பில் சிறிய கட்டி ஒன்று வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டியால்தான் சிறுநீர் கழிக்க சிரமப்படுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து கட்டியை கரைக்க மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆப்ரேஷன்
ஆனால் இரண்டு வாரம் ஆகியும் மருந்து சரியாக வேலை செய்யவில்லை. இதை பார்த்த மருத்துவர், ஐயா இதெல்லாம் வேலைக்கு ஆகாது உடனடியாக நாம ஆப்ரேஷன் பண்ணிடலாம் என்று கூறியுள்ளார். ஆனால் முதியவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு நாள் திடீரென முதியவரை நர்ஸ் அனைவரும் சேர்ந்து ஆப்ரேஷனுக்கு தயார் படுத்தியுள்ளனர். ஆப்ரேஷனுக்கான காரணம் என்ன என்பது குறித்து முதியவரிடம் தெரிவிக்கப்படவில்லை. மயக்கமருந்து கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் 3 மணி நேரம் கழித்து ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து முதியவர் வெளியில் அழைத்து வரப்பட்டுள்ளார்.

அதிர்ச்சி
அப்போது கூட அவருக்கு மயக்கம் தெளியவில்லை. ஒரு வழியாக சுமார் 5 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்த நிலையில் எனக்கு என்ன ஆச்சு என அக்கம் பக்கத்தில் இருந்த நர்ஸிடம் விசாரித்துள்ளார். யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. பின்னர் வார்டுக்கு வந்த டாக்டரை விசாரிக்கையில் டாக்டர் சொன்ன பதில் அவரை தூக்கி வாரி போட்டிருக்கிறது. அதாவது இவருடைய ஆணுறுப்பு வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கூறியுள்ளார். ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு அதிர்ச்சியிலிருந்து மீண்டு வராத அவருக்கு இது பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

வழக்குப்பதிவு
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புற்றுநோய் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டிருக்கிறார். இவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் 4 ஆண்டுகள் வரை ஆகியுள்ளது. அதன்பின்னர் முதல் வேலையாக மருத்துவமனை மீது கேஸ் போட்டிருக்கிறார். ஐரோப்பிய நாடுகளில் தற்போது இந்த கேஸ்தான் பேசுபொருள். வரும் 9ம் தேதி இந்த கேஸ் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications