யானை எறிந்த கல் சிறுமியைக் கொன்றது... மொராக்கோ மிருகக்காட்சி சாலையில் சோகம்
ரபாத்: மொராக்கோ நாட்டில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் யானை கல் வீசி தாக்கியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள ரபாத் நகரில் மிருகக்காட்சி சாலை உள்ளது. அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சி சாலைகளில் அதுவும் ஒன்று. இந்நிலையில், 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் மிருகக்காட்சி சாலைக்கு சென்றிருந்தார். அங்கிருந்த வன விலங்குகளை ஆர்வத்துடன் சிறுமி கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது யானைகள் இருக்கும் பகுதிக்கு சென்ற அந்த சிறுமி, பார்வையாளர் பகுதியில் இருந்து தடுப்பு வேலிக்கு வெளியே நின்றபடி அங்கிருந்த யானையை பார்த்து போட்டோ எடுக்க முயற்சித்துள்ளார். அச்சமயத்தில், அந்த பெண் யானையாது தனது தூதிக்கையால் அங்கிருந்த கல்லை தூக்கி சிறுமியை நோக்கி வீசியுள்ளது.
துரதிஷ்டவசமாக அந்த கல்லானது, சிறுமியின் தலையை பதம் பார்த்தது. இதனால், சிறுமியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ரபாத் மிருகக்காட்சிச் சாலையில் இது போன்ற உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை. கடந்த 2012-ம் ஆண்டு மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்டது முதல் விலங்குகள் எந்தவித உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications