நீ வா செல்லம், பர்கர் வாங்கித் தர்றேன்.. 4 வயது தங்கச்சியுடன் வேனை ஓட்டிச் சென்ற 8 வயது "பொடியர்"!
அமெரிக்காவில் 8 வயது சிறுவன் தனது தங்கைக்கு பர்க்க வாங்க வேன் ஓட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 8 வயது சிறுவன் தனது தங்கைக்கு பர்க்க வாங்க வேன் ஓட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் மூலம் கார் ஓட்ட கற்றுக்கொண்டு சிறுவன் வேனை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிழக்கு பாலெஸ்டின் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் 4 வயது சிறுமியுடன் வேனை ஓட்டிச்சென்றுள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரி ஜேக்கப் கோச்லருக்கு தலைமையிலான குழுவினர் சிறுவனையும் வேனையும் தேடி விரைந்து சென்றனர்.

சீஸ் பர்கர் சாப்பிட்ட சிறுவன்
அதற்குள் அந்த சிறுவன் வேனை ஆளில்லா ரயில்வே கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக மெக் டோனால்டுக்கு சென்றான். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுவன் தனது தங்கையுடன் அமர்ந்து சீஸ் பர்கர் சாப்பிடுவதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பர்கர் சாப்பிட ஆசை
இதையடுத்து சிறுவனிடம் சென்ற போலீஸ் அதிகாரி கோச்லர் ஏன் வேன் ஓட்டி வந்தாய்? என கேட்டார். அதற்கு அவன் எங்களுக்கு சீஸ் பர்கர் சாப்பிட ஆசையாக இருந்தது என்றான்.

பெற்றொர் தூங்கிக்கொண்டிருந்தனர்
ஆனால் எனது அம்மாவும், அப்பாவும் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை தொந்தரவு செய்யாமல் எனது தங்கையை அழைத்துக் கொண்டு தந்தையின் வேனை ஓடி வந்தேன் என்றான்.

யூடியூப் பார்த்து..
வேன் ஓட்ட எப்படி கற்றுக் கொண்டாய் என கேட்டதற்கு யூடியூப் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினான். இதனைக் கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

சாலை விதிகளை மதித்த சிறுவன்
ஆனால் வேனை ஓட்டிச்செல்லும் போது சிறுவன் சாலை விதிகளை மதித்து சென்றதாகவும் அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகளை கண்காணிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications