முன்னாடியெல்லாம் ஊருக்குள்ள உலா தான் வந்தீங்க.. இப்போ ஷாப்பிங்கே பண்ண ஆரம்பிச்சுட்டீங்க போல !
அமெரிக்காவில் கரடி ஒன்று சூப்பர்மார்க்கெட்டில் அட்டகாசம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கரடி ஒன்று அட்டகாசம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
யானை, சிறுத்தை, புலி, கரடி போன்ற வன விலங்குகள், காட்டுக்குள் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அந்த வன விலங்குகள் சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்து ஷாப்பிங் செய்தது பற்றி கேள்விப்பட்டதுண்டா?
அப்படிப்பட்ட ஒரு விநோதமான சம்பவம் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் நடந்திருக்கிறது.

கரடியின் ஷாப்பிங்
சம்பவத்தன்று அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கரடி ஒன்று நுழைந்திருக்கிறது. மற்ற வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாமல் மிக சாவகாசமாக அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து பார்த்திருக்கிறது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து பீதியில் உறைந்தனர்.

முதல்முறையல்ல
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்தக் கரடி வந்த வழியே திரும்பி போய்விட்டது. அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு கரடி வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த மாதம் 18ம் தேதி அந்த கரடி சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து சென்றிருக்கிறது.

சிப்ஸ் கிடைக்காத ஏமாற்றம்
அதே எண்ணத்தில் தான் இம்முறையும் அந்த கரடி சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்திருக்கிறது. ஆனால் அது எதிர்பார்த்த சிப்ஸ் பாக்கெட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது புதுக்கதையால்ல இருக்கு
வனப் பகுதிகளை அழித்து மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றி விட்டதால் தான் இப்படி வன விலங்குகள் ஊருக்குள் உணவு தேடி வருகின்றன என்ற பேச்சு நீண்ட காலமாக உள்ளது. ஆனால் இப்போது அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், இந்தக் கரடி சிப்ஸ் பாக்கெட்டைத் தேடி சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்திருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications