For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலூசிஸ்தானில் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடிப்பு... 10 பேர் பலி!

பலூசிஸ்தானில் மசூதிக்கு வெளியே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

மஸ்டங்: பலூசிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

பலூசிஸ்தானின் மஸ்டங் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து அவர்கள் வெளியே வந்தனர்.

A blast in Balochistan has killed at least ten persons

அப்போது அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் செனட்டின் துணைத் தலைவர் அப்துல் கஃபூர் ஹைதேரி சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

English summary
A blast in Balochistan has killed at least ten persons. The blast took place at Mastung in the Balochistan province after people when people were coming out after Friday prayers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X