கல்யாண செலவிற்காக 62 மாடி கட்டிடத்தில் தொங்கிய நபர்.. தவறி விழுந்து மரணம் -வீடியோ
சீனாவை சேர்ந்த ஸ்டாண்ட் கலைஞர் ஒருவர் வித்தியாசமான சாதனை ஒன்றிற்கு முயற்சி செய்யும் போது மரணம் அடைந்தார்.
Recommended Video

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த ஸ்டாண்ட் கலைஞர் ஒருவர் வித்தியாசமான சாதனை ஒன்றிற்கு முயற்சி செய்யும் போது மரணம் அடைந்தார். 'வு யோங்னிங்' என்ற அந்த நபர் 62 மாடிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணம் அடைந்து இருக்கிறார்.
இவர் தன்னுடைய கல்யாண செலவிற்காக இந்த சாதனையை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு நிறைய மருத்துவ செலவுகளும் இருந்துள்ளது.
தற்போது இவர் சாதனையின் போது கீழே விழும் வீடியோ வெளியாகி இருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் வகையில் இருக்கும் வீடியோ அவர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சாதனைக்காரர் வு யோங்னிங்
பெய்ஜிங்கில் இருக்கும் சாதனை கலைஞர்களில் மிகவும் வித்தியாசமானவர் வு யோங்னிங். திடீர் என்று ஏதாவது உயரமான கட்டிடத்திற்கு சென்று அங்கிருந்து வித்தியாசமான சாதனை ஒன்றை செய்து வீடியோவாக வெளியிடுவது இவரது வழக்கம். இவரது வீடியோவிற்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த வீடியோக்களை பார்த்து பலர் இவரை சீன படங்களுக்கு ஸ்டாண்ட் செய்ய அழைத்து இருக்கின்றனர்.

எச்சரிக்கை
இவரது சாகசங்களை பார்த்த போலீஸ் இவரை பல முறை எச்சரிக்கை செய்து இருக்கிறது. மேலும் இவரும் சில சமயம் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சீனாவில் இருக்கும் 'வெய்பு' என்ற சமூக வலைதளத்தில் இவர் மிகவும் வைரலாக இருந்தார். இவருக்கு அங்கு 60,000 பின்தொடர்பாளர்கள் இருந்தார்கள். இவர் போடும் எல்லா வீடியோக்களும் வைரல் ஆகும்.
மரணம்
இவர் சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு சீனாவில் இருக்கும் 62 மாடிக்கட்டிடத்தில் புதிய சாதனை ஒன்றை செய்ய முயன்று இருக்கிறார். அதன்படி அந்த மாடி நுனியில் தொங்கி அங்கிருந்து 'புல்-அப்ஸ்' எடுக்க முயன்றுள்ளார். ஆனால் தொடக்கமே இவருக்கு தடுமாற்றமாக இருந்துள்ளது. அந்த மாடி நுனியில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இறங்கி சாகசம் செய்தவர் சில நிமிடத்தில் கீழே விழுந்தார். இதன் மூலம் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

எதற்காக செய்தார்
வு யோங்னிங் இந்த சாதனையை தனது திருமண செலவிற்காக செய்ததாக கூறப்படுகிறது. சாதனையை சரியாக செய்து முடித்தால் 1 கோடி ரூபாய் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. தனியார் நிறுவனத்தின் அந்த பணத்திற்கு ஆசை பட்டு அவர் இந்த சாதனையை முயற்சி செய்து இருக்கிறார். இவர் மரணம் அடைந்த நிகழ்வை இவர் காதலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications