20 ஆண்டுகளாக மாதவிடாய் சுழற்சி, அடிவயிற்று வலியால் துடித்த ஆண்!.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: கடந்த 20 ஆண்டுகளாக சீன இளைஞருக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சின்சுவா மாகாணத்தை சேர்ந்தவர் சென் லீ (33). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததாக கருதினார். சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த பிரச்சினை அனைத்து நாட்களிலும் இருக்காது.

ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மீண்டும் 20 ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளது. மேலும் அடிவயிற்றில் வலியும் இருந்து வந்துள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பணத்தை செலவு செய்ய முடியாததால் உடல்நிலை குறித்து பெரிதும் கவலைக்கொள்ளாமல் இருக்கும் வரை இருந்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்துள்ளார்.

 மாதவிடாய்

மாதவிடாய்

பின்னர் அவருக்கு தொடர்ந்து மாதவிடாயும் அடிவயிற்றில் வலியும் இருந்துள்ளது. இதையடுத்து இவர் ஒரு யூரோலாஜிஸ்டை சந்தித்து ஆலோசனை பெற்றார். அவருக்கு மாதத்தில் பாதி நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் ரத்தப் போக்கால் பாதிப்படைவது மருத்துவருக்கும் புரியவில்லை.

 சிகிச்சை

சிகிச்சை

ஆயினும் எந்த சிகிச்சையும் பெறால் ரத்த போக்கு தானாகவே நின்றுவிட்டது. இது வினோதமாக இருந்தது. பின்னர் அவருக்கு ஹார்மோன் பரிசோதனை செய்யப்பட்டது. குரோமோசோம் சோதனை என அனைத்து சோதனையும் செய்யப்பட்டது. இதன் முடிவுகள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது.

ஹார்மோன்

ஹார்மோன்

ஆண்களுக்கான டெஸ்டோஸ்ட்ரோன் இருக்க வேண்டிய இயல்பான அளவிலும் பெண்களுக்கு இருக்க கூடிய ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் இருக்க வேண்டிய அளவுக்கு இருந்துள்ளது. அதாவது வயது வந்த பெண்ணின் உடலில் இருக்கக் கூடிய ஹார்மோன்கள் அவரது உடலில் இருந்தது. ஸ்கேன் பார்க்கும் போது அவருக்கு பெண்களுக்கு இருப்பதை போன்று பிறப்புறுப்பும் இருந்துள்ளது.

 13 ஆவது வயதில்

13 ஆவது வயதில்

இதனால்தான் அவருக்கு 13 ஆவது வயதில் அவர் பூப்படைந்த நிலையில் தொடர்ந்து 20 ஆண்டுகள் மாதவிடாய் சுழற்சி வந்துள்ளது. ஆனால் அதை லீயோ சிறுநீரக பிரச்சினை என தவறாக புரிந்து கொண்டார். இதையடுத்து அவருக்கு பெண்ணின் பிறப்புறுப்பை அகற்றமுடிவு செய்யப்பட்டது.

 3 மணி நேரம் ஆபரேஷன்

3 மணி நேரம் ஆபரேஷன்

அந்த முடிவையும் லீயையே மருத்துவர்கள் எடுக்கச் சொன்னார்கள். அதனால் ஆணாகவே தான் தன்னை உணர்வதால் தற்போதைக்கு பெண் பிறப்புறுப்பை அகற்றிவிடலாம் என்றார். இதையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 3 மணி நேரமாக அவரது கர்ப்பப்பையை கடந்த மாதம் அகற்றிவிட்டனர். இதையடுத்து அவருக்கு தற்போது ரத்த போக்கு பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்துள்ளார்.

 கர்ப்பப்பை

கர்ப்பப்பை

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில் அவருடைய கர்ப்பப்பை நல்ல நிலையில் வளர்ந்திருந்தது. அவர் பெண்ணாக மாற விரும்பியிருந்தாலும் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்த கர்ப்பப்பை இருந்தது என தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+