தனது கடைசி நிமிடம் வரை கம்பீரமாகவே வாழ்ந்தார் சதாம்: ஈரான் பாதுகாப்பு அதிகாரி தகவல்
பாக்தாத்: தூக்கிலிடப்பட்ட கடைசி நிமிடம் வரை கம்பீரமாகவே நடந்து கொண்டதாக, சதாம் ஹூசைனை தூக்கிலிடும் போது பணியில் இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில் 148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் உசேன் மீது பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வக்கீல்கள் படுகொலை மற்றும் நீதிபதிகள் மாற்றம் என பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன், சதாமின் சகோதரர் பர்சான் அல் திக்ரிதி மற்றும் ஈராக் முன்னாள் நீதிபதி அவாத் அல் பன்தர் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து பாக்தாத் சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பாக்தாதில் உள்ள ரகசிய இடத்தில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது மரண தண்டனையை நேரில் பார்த்த அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான முவாஃப்க் அல் ரூபேயின், ‘தூக்கு மேடைக்கு சதாமை அழைத்துச் சென்றபோது அவர் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாகவும், நிதானமாகவும்,திடமாகவும் நடந்து சென்றார்.
தூக்கு மேடைக்கு போகும் போது கையில் திருக்குரானை ஏந்திச் சென்றார். தூக்கு போடும்போது அணியும் முகமூடியை அணிய மறுத்த அவர் தூக்குக் கயிற்றுக்கு தலையைக் காட்டினார்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்டனை நிறைவேற்றப்பட்டபோது அமெரிக்க அதிகாரிகள் யாரும் அந்த இடத்தில் இல்லை. பொதுவாக மரண தண்டனை நிறைவேற்றப் படும் போது கடவுளே என்னைக் காப்பாற்று என்றோ அல்லது என் பாவங்களை மன்னியுங்கள் என்றோ கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், சதாம் அந்த விதமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
தூக்கிலிடப் படப்போவதை எண்ணி அவர் சிறிதும் கலக்கமடையவில்லை. இத்தகைய மன உறுதி மிக்க மனிதனை நான் இதுவரைச் சந்தித்ததில்லை' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications