புரூஸ் லீ போலவே "நுன்சாக்" சுழற்றும் 5 வயது "குட்டிப் புலி"!
டோக்கியோ: டோக்கியோவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் புரூஸ் லீயைப் போன்றே நுன்சாக் சுழற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள புரூஸ் லீ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
பின்னணியில் உள்ள ஒரு பெரிய டி.வி.யில் புரூஸ் லீயின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘கேம் ஆப் டெத்' படத்தில் இடம்பெறும் உச்சகட்ட சண்டைக்காட்சி ஓட, ரியுஜி இமய் என்ற அந்த சிறுவனும் அதேபோல் நுன்சாக்கை காற்றில் சுழற்றி அசத்துகிறான்.
இந்தக் காட்சியை சிறிய வீடியோ தொகுப்பாக உருவாக்கியுள்ள ரியுஜி இமய்-யின் தந்தை அதை கடந்த வெள்ளிக்கிழமை ‘யூ டியூப்'பில் வெளியிட்டுள்ளார்.
இதுவரை சுமார் 30 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து, வியந்து, பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அந்த குட்டி புரூஸ் லீக்கு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இவனுக்கு பேஸ்புக்கில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications