நான் 2028ல் இருந்து வந்து இருக்கிறேன்.. டைம் டிராவல் செய்ததாக பீதி கிளப்பிய இளைஞர்

டைம் டிராவல் செய்து 2028ல் இருந்து வந்து இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கூறியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: டைம் டிராவல் செய்து 2028ல் இருந்து வந்து இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கூறியிருக்கிறார். நோவா என்ற இந்த நபர் தன்னுடைய டைம் டிராவல் அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அதேபோல் 2028 இருக்கும் உலகம் குறித்தும் தற்போது இருக்கும் உலகம் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த நபர் இது குறித்து யூ- டியூபில் வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவின் காரணமாக ஒரே நாளில் நோவா வைரல் ஆகியுள்ளார். அதேபோல் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இருந்து வந்தவர்

எதிர்காலத்தில் இருந்து வந்தவர்

பொதுவாக பல நபர்கள் அமெரிக்காவில் தன்னை எதிர்காலத்தில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த நோவா இதில் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருக்கிறார். அதன்படி எதிர்காலத்தில் டைம் மிஷின் இருக்கிறது என்பதை தற்போது உள்ள மக்களுக்கு தெரிவிக்கவே அவரை அமெரிக்க அரசாங்கம் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 2028ல் இருந்து தான் பயணித்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலம் எப்படி

எதிர்காலம் எப்படி

அவர் தனக்கு தற்போது 50 வயது ஆவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீடியோவில் பார்க்க 25 வயது இளைஞரை போலவே இருக்கிறார். மேலும் டைம் டிராவல் காரணமாக அவருக்கு அடிக்கடி தலை வலிப்பதாகவும், உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் எதிர்காலத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் மாறியிருப்பதாகவும். கூகுள் வெளியிட்டு இருக்கும் பொருட்கள் பல எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

எப்போது டைம் மிஷின் கண்டுபிடிக்கட்டது

எப்போது டைம் மிஷின் கண்டுபிடிக்கட்டது

மேலும் அவர் டைம் மிஷின் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த அதிர்ச்சி ஊட்டக்கூடிய தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். அதன்படி 2003 ஆம் டைம் மிஷின் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் உலகின் முக்கிய பணக்காரர்கள் பலர் இந்த செய்தியை மறைத்து வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மக்களுக்கு இந்த செய்தியே 2025ல் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க தேர்தல் கணிப்பு

தற்போது அவர் அமெரிக்க தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்றும் கண்டுபிடித்துள்ளார். அதன்படி அடுத்த முறையும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியுள்ளார். மேலும் இவரிடம் தன்னுடைய எதிர்காலம் குறித்து கேட்டு பலர் பணம் அனுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+