32 அடி ஆழ்கடலுக்கடியில் காதல் கடிதம், மோதிரத்துடன் பிரபோஸ் செய்த இளைஞர்.. நீரில் மூழ்கிய சோகம்

Subscribe to Oneindia Tamil

டோடோமா: டான்சானியாவில் பெம்பா தீவுகளில் 32 அடி ஆழ கடலுக்கு அடியில் சென்ற இளைஞர் காதல் கடிதம், மோதிரத்துடன் தனது காதலிக்கு பிரபோஸ் செய்த போது நீரில் மூழ்கி பலியானார்.

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டீவன் வெபர். இவரது காதலி கெனிஷா ஆன்டோயினி. இவர்கள் இருவரும் டான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவுகளுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் உள்ள மாண்டா விடுதியில் தங்கினர்.

இந்த நிலையில் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை சொல்ல ஸ்டீவன் விரும்பினார்.

மூச்சை பிடிக்க முடியாது

மூச்சை பிடிக்க முடியாது

இதையடுத்து விடுதியை விட்டு தண்ணீருக்குள் இறங்கிய ஸ்டீவன், தான் எழுதிய காதல் கடிதத்தை அங்கிருந்த கண்ணாடி வழியாக கெனிஷாவிடம் காண்பித்தார். இதனால் அவர் பூரித்து போனார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருக்கையில், உன்னை நான் காதலிக்கும் அனைத்தையும் உன்னிடம் விளக்கும் அளவுக்கு என்னால் மூச்சைப் பிடித்து கொள்ள முடியாது.

காதல் அதிகரிப்பு

காதல் அதிகரிப்பு

ஆனால் உன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் விரும்புகிறேன். நாளுக்கு நாள் உன் மீதான காதல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நீ எனது மனைவியாக இருப்பாயா, என்னை திருமணம் செய்து கொள்வாயா என கேள்வி எழுப்பினார். தன் கையில் இருந்த மோதிரத்தையும் காதலிக்கு காண்பித்தார்.

பேஸ்புக் பக்கத்தில்

இவை அனைத்தையும் உணர்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்த கெனிஷா ஆமாம் என கூறிய போது, அதை கேட்க முடியாமல் ஸ்டீவன் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் கெனிஷா. பின்னர் தகவலறிந்த ரிசார்ட் நிர்வாகம் ஸ்டீவனை காப்பாற்ற முயன்றது. ஆனால் அவர் அதற்குள் மூழ்கி பலியானார். இந்த நிலையில் ஸ்டீவன் பிரபோஸ் செய்தததையும் அவரது காதல் கடிதத்தையும் கெனிஷா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சிரிக்க வைத்த தருணம்

சிரிக்க வைத்த தருணம்

அதில் கெனிஷா கூறுகையில், ஸ்டீவன் நீ தினமும் என்னை சிரிக்க வைத்தே என் கண்களில் தண்ணீரை வரவழைப்பாய். இது வரை என்னிடம் யாரும் காட்டாத அன்பை நீ என்னிடம் வெளிப்படுத்தினாய் என அந்த பேஸ்புக் பதிவில் கெனிஷா கூறியுள்ளார். காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த முயன்ற நபர் இப்படி நீரில் மூழ்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+