பூமி வட்டம் இல்லை தட்டை தான்.. நிரூபிக்கிறேன் பாருங்க.. ராக்கெட்டில் பறந்து சாதித்த புத்திசாலி
பூமி தட்டையாக இருக்கிறது என நிரூபிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதில் பறந்து இருக்கிறார்.
கலிபோர்னியா: பூமி தட்டையாக இருக்கிறது என நிரூபிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக ராக்கெட் தயாரித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் தனது சொந்த ராக்கெட்டில் பறந்து சாதனையும் செய்து இருக்கிறார்.
பூமியில் இருந்து பல மைல் தூரம் ராக்கெட்டில் சென்று அங்கு இருந்து இவர் பூமியை பார்க்க முயற்சி செய்து வருகிறார். அதன்முலம் இவர் பூமி வட்டம் இல்லை தட்டை தான் என நிரூபிக்க விரும்புவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இதற்கு முன்பே பல சாதனைகளை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை பட்டம் கூட வாங்கி இருக்கிறார்.

தட்டையான பூமி
பூமி வட்டம் இல்லை தட்டைதான் என நிரூபிப்பதற்காக அமெரிக்காவில் பல இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு பெரிய கருத்தரங்கம் ஒன்றை அமெரிக்காவில் நடத்தியது. அங்கு இருந்த 'மைக் ஹுக்ஸ்' என்ற நபர் தற்போது பூமியை தட்டை என்று நிரூபிப்பதற்காக புதிய வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்து இருக்கிறார்.

சொந்த ராக்கெட்
அவர் கடந்த நான்கு வருடமாக சொந்தமாக ராக்கெட் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். அதன்படி ஒருவாரத்திற்கு முன்பு உண்மையாக நீராவியில் இயங்கும் சொந்த ராக்கெட் ஒன்றை உருவாக்கினார். ராக்கெட்டை உருவாக்கியது மட்டும் இல்லாமல் அதை 'மோஜாவே' என்ற பாலைவன பகுதிக்கு எடுத்துச் சென்று விண்ணில் ஏவினார். அந்த ராக்கெட்டில் தன்னை இறுக்கமாக கட்டி 550 தூரம் பறந்து உள்ளார்.

திட்டம் என்ன
அவர் இப்போது மிகவும் குறைந்த தூரமே வானத்தில் பறந்து இருக்கிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வானத்தில் ராக்கெட் மூலமாக பறந்து பூமி எப்படி இருக்கிறது என்று உயரத்தில் இருந்து பார்க்க விரும்புவதாக கூறுகிறார். மேலும் தட்டையாக இருக்கும் பூமியின் புகைப்படத்தை எடுத்து கண்டிப்பாக உண்மையை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த செயல் அதிக தூரம் ராக்கெட்டில் தனியாக பறந்த நபர் என்று கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக பதிவாகி இருக்கிறது.

மைக்கின் பேட்டி
இந்த நிலையில் இந்த வித்தியாசமான மனிதர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''பூமி பல காலமாக தட்டையாகத்தான் இருக்கிறது. நாசாவும், இல்லுமினாட்டிகளும் சேர்ந்துதான் பூமி உருண்டை என்று கூறியுள்ளனர். அதை நான் மக்களுக்கு புரிய வைப்பேன். என்னை போலவே என் நண்பர்கள் பலர் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர்'' என்று கூறியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications