‛‛இரவை பகலாக்கிய விண்கல்’’.. அடேங்கப்பா இவ்வளவு வெளிச்சமா! வாவ் சொல்லவைக்கும் வீடியோ
மேட்ரிட்: இரவு வானில் நீல நிற விண்கல் ஒன்று பறந்து சென்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
விண்வெளி என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. குரங்கிலிருந்து நாம் மனிதர்களாக பரிணாமமடைய தொடங்கியதிலிருந்து விண்வெளியை புரிந்துக்கொள்ள முயன்று வருகிறோம். வேட்டை சமூகமாக இருந்த காலத்தில், மாடு, குதிரை என சக உயிரினங்களை நாம் வாழ்ந்த குகைகளில் வரைந்து வைத்திருக்கிறோம். அதில் நட்சத்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இப்படித்தான் விண்வெளி மீதான ஆர்வம் நமக்கு தொடங்கியது.

இன்னும் சரியாக சொல்வதெனில், வானியல் மாற்றங்களை கொண்டுதான் நமது வாழ்க்கை முறையை வடிவமைத்து வைத்திருக்கிறோம். கோடை, குளிர், வேணிற் என எல்லா காலத்தையும் புரிந்து வைத்து அதன்படி மனிதர்களாகிய நாம் இன்று வரை பரிணமித்து வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி இருக்கையில் நமக்கு புரியாத சில வித்தியாசமான மாற்றங்கள் விண்வெளியில் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.
அதில் ஒன்றுதான் விண்கல் கடந்து செல்லும் நிகழ்வு. இன்றும் இரவு வானில் பார்த்தால் ஆங்காங்கே ஒளி கீற்று தோன்றும். ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த ஒளி தோன்றி மறைந்துவிடும். இதுதான் விண்கல் கடந்து செல்லும் நிகழ்வு, அல்லது விண்கல் மழை என்று சொல்லப்படுகிறது.
JUST IN: Meteor spotted in the skies over Spain and Portugal.
— Collin Rugg (@CollinRugg) May 19, 2024
This is insane.
Early reports claim that the blue flash could be seen darting through the night sky for hundreds of kilometers.
At the moment, it has not been confirmed if it hit the Earth’s surface however some… pic.twitter.com/PNMs2CDkW9
சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தை தாண்டி ஒரு விண்கற்கள் பெல்ட் இருக்கிறது. இங்கு கோடிக்கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. சில நேரங்களில் இந்த கற்கள் இந்த பெல்ட்டிலிருந்து விலகி வியாழன், சனி கோள்கள் உள்ள பகுதிக்கோ அல்லது செவ்வாய், பூமி இருக்கும் வந்து விடும். இப்படி வரும் கற்கள் இந்த கிரகங்களின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு அதில் விழுந்துவிடும்.
பூமியை நோக்கி இந்த கற்கள் வரும்போது, வளிமண்டலத்தில் உரசி தீப்படித்து எரிந்துவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இப்படி எரியும்போது எற்படும் வெளிச்சம் விண்கல் மழையாக பூமியில் தெரியும். அப்படியான ஒரு சம்பவம்தான் நேற்று ஸ்பெயினிலும், போர்ச்சுக்கல்லிலும் தெரிந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
JUST IN: Meteor spotted in the skies over Spain and Portugal.
— Collin Rugg (@CollinRugg) May 19, 2024
This is insane.
Early reports claim that the blue flash could be seen darting through the night sky for hundreds of kilometers.
At the moment, it has not been confirmed if it hit the Earth’s surface however some… pic.twitter.com/PNMs2CDkW9
இந்த சம்பவத்தில் ஒரே ஒரு விண்கல் மட்டும் மிகவும் பிரகாசமான வெளிச்சத்தை கொடுத்திருக்கிறது. திறந்தவெளி பார்ட்டி, கார் டேஷ் போர்டு கேமரா, வீட்டின் சிசிடிவி கேமரா என எல்லா இடங்களிலும் இந்த விண்கல்லின் வெளிச்சம் பதிவாகியுள்ளது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இது புகழ்பெற்ற ஹேலி விண்கல் விட்டுச் சென்ற தூசியிலிருந்து வந்த சிறு விண்கல் என்று விளக்கமளித்துள்ளனர். தோராயமாக 75-79 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹேலி வால் நட்சத்திரம் பூமியை கடந்து செல்லும். இந்த வால் நட்சத்திரத்திலிருந்து சில தூசிகள் அது சென்ற பாதையில் தேங்கிவிடும். இப்படியான தூசிகள், பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு வளிமண்டலத்தில் மோதியிருக்கிறது. அப்படியான சம்பவம்தான் இது.
Here’s another view! pic.twitter.com/jevje4zPdZ
— Sarah Smith (@Defundmedianow) May 19, 2024
இதனை எட்டா அக்வாரிட் விண்கல் மழை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த விண்கல் மழையை வெறும் கண்களால் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இதனை பார்க்க முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கிய இந்த விண்கல் மழை, இன்னும் நாளையும் உச்சத்தை எட்டும். இந்த விண்கற்கள் சுமார் 2.38 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும். இந்த வேகத்தில் அந்த கற்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிடும். எனவே பயப்பட தேவையில்லை.
அதேபோல இந்த கண்கொள்ளா காட்சியை ஒளி மாசு குறைவாக இடத்திலிருந்து நன்கு பார்க்க முடியும். இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் இதனை தெளிவாக பார்க்க முடியும். இந்தியாவில் பெங்களூரில் இதனை பார்க்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் இருப்பவர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள வைனு பப்பு விண்வெளி ஆய்வு மையம் அருகில் ஒளி மாசு குறைவாக இருப்பதால் அங்கிருந்து பார்க்க முயற்சிக்கலாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications