அதெல்லாம் தர முடியாது, தங்க கக்கூஸ் வேணும்னா தரட்டா.. டிரம்புக்கு நோஸ்கட்
வான்கா வரைந்த ஓவியத்தை கேட்ட அமெரிக்க அதிபருக்கு தங்க டாய்லெட் வழங்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் 'குஹ்ஹெனீம்' என்ற மியூசியத்தில் பிரபல ஓவியர் வான்கா வரைந்த ஓவியம் ஒன்று இருக்கிறது. இந்த ஓவியத்தை அமெரிக்க அதிபர் தன்னுடைய தனி வீட்டில் வைக்க கேட்டு இருக்கிறார்.
இதற்காக அவர் அந்த மியூசியத்திற்கு கடிதம் கூட எழுதி இருக்கிறார். ஆனால் அந்த மியூசியம் அந்த ஓவியத்தை அவருக்கு விற்க மறுத்து இருக்கிறது.
அதற்கு பதிலாக தங்கத்தால் ஆனா டாய்லெட்டை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதில் அனுப்பி இருக்கிறது. இது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஓவியம்
அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டது வான்கா வரைந்த ஓவியம் ஆகும். ''லேண்ட்ஸ்கேப் அண்ட் ஸ்னோ'' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஓவியம் 1888ல் வரையப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு பல கோடிகளை தாண்டும். பச்சை புல்வெளியில் மனிதரும், நாயும் நடந்து செல்வது போல இது இருக்கும்.

கொடுக்க மறுப்பு
இதை கேட்ட அதிபருக்கு அந்த மியூசிய நிர்வாகம் பதில் அனுப்பி இருக்கிறது. அதில் ''இப்போது அந்த ஓவியத்தை விற்கும் எண்ணத்தில் இல்லை. அதற்கு பதிலாக உங்களுக்கு 'அமெரிக்கா' என்ற டாய்லெட் ஒன்று தருகிறோம். இது தங்கத்தால் ஆனது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பழையது
இதை சில காலம் முன்பு வரை அந்த மியூசியம் பொதுவில் வைத்து இருந்தது. மக்கள் இதை பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதற்கு அமெரிக்கா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கர்களின் வளத்தை குறிக்க இந்த பெயர் வைக்கப்பட்ட உள்ளது. 18 கேரட் தங்கத்தால் ஆனது.

எப்படி
மேலும் ''இதை உங்கள் வீட்டில் வந்து நாங்களே பொருத்தி தருகிறோம். எப்படி இதை பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறோம். முக்கியமாக இதை நீங்கள் வாங்க முடியாது. சில மாத வாடகைக்கு மட்டுமே எடுக்கலாம்'' என்றுள்ளார்கள்'

பதில் இல்லை
இது அமெரிக்க அதிபருக்கு நேர்ந்த பெரிய அவமானம் ஆகும். வேண்டும் என்றே அதிபரை அந்த மியூசிய நிர்வாகம் அவமானப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வெள்ளை மளிகை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications