பெயரே பகீர்னு இருக்கே! கனடாவை அச்சுறுத்தும் ”ஜாம்பி நோய்” - என்ன செய்யும் தெரியுமா?
ஒட்டாவா: கனடாவின் முக்கிய நகரங்களில் மான்களுக்கு பரவி வரும் CWD எனப்படும் ஜாம்பி நோய் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜாம்பி எனப்படும் பெயர் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒன்று. ஜாம்பியால் கடிக்கப்பட்ட நபரும் ஜாம்பியாக உருமாறி அடுத்தடுத்து மற்றவர்களையும் கடித்து ஒரு நகரமே ஜாம்பிக்களால் ஆக்கிரமிக்கப்படுவதை ஹாலிவுட் படங்களில் ரணக்கொடூரமாக காட்டி இருப்பார்கள். உள்ளத்தை உறைய வைக்கும் இந்த பெயருடன் தமிழிலும் படம் வெளியாகிவிட்டது.
கனடாவில் பரவி வரும் ஒரு நோய்க்கு ஜாம்பி என பெயரிடப்பட்டு உள்ள செய்தி வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்து இருக்கிறது. கனடாவில் உள்ள அல்பெர்டா, சாஸ்கட்ஸ்வான் ஆகிய மாகாணங்களில் ஜாம்பி நோய் மான்களுக்கு அதிகளவில் பரவி வருகிறது. அண்மையில் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மான் உயிரிழந்ததை அடுத்து இது பூதாகரம் எடுத்துள்ளாது. இந்த நோயை Chronic Wasting Disease (CWD) என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம்
தொற்றுநோயான இது மான், கலைமான், சிகா மான், எல்க் மற்றும் மூஸ் ஆகிய விலங்குகளிடையே அதிகளவில் பரவும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது. இந்த நோய்க்கு எந்தவிதமான சிகிச்சை முறையோ, தடுப்பூசிகளோ இல்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அராய்ச்சியாளர்கள், அதில் பாதிக்கப்படும் விலங்குகள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறி இருக்கின்றனர்.

ஜாம்பியின் தாயகம் அமெரிக்கா
முதன்முதலாக கடந்த 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஜாம்பி நோய் கொலராடோ, ஒகலஹோமா, கன்சாஸ், நெப்ரஸ்கா, மினிசோட்டா, விஸ்கான்சின், தெற்கு டகோடா மற்றும் மோண்டானா உள்ளிட்ட 26 மாகாணங்களுக்கு பரவியது. கனடாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு சாஸ்கட்ஸ்வான் பகுதியில் உள்ள எல்கிற்கு இந்த நோய் முதன்முதலில் பரவி இருக்கிறது.

மனிதர்களுக்கு பரவுமா?
CWD எனப்படும் இந்த ஜாம்பி நோயால் பாதிக்கப்பட்ட மான்கள், எல்குகளை சாப்பிடும் மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் எச்சரித்து இருக்கிறது. இவற்றின் சிறுநீரும் உமிழ்நீரும் நோயை பரப்பும் என்பதால் வேட்டையாட செல்பவர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இதனால் இறந்த விலங்குகளின் சடலங்களை முறையாக கையாளாவிட்டாலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆனால், இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுமா என்பதற்கு ஆய்வுப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும், மனிதர்கள் உஷாராக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூளையை கட்டுப்படுத்தும் ஜாம்பி
இந்த நோய் குறித்து ஆய்வு செய்த மருத்துவர்கள், CWD ஆல் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூளையின் கட்டுப்பாட்டை இழந்துவிடும் என்று தெரிவிக்கின்றனர். கனடா உணவு ஆய்வு நிறுவனம் தெரிவிக்கையில், இந்த நோயால் பாதிக்கப்படும் விலங்குகளின் நடவடிக்கைகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்றும், அதிகளவில் உமிழ்நீரும் சிறுநீரும் வெளியேறி எடைக்குறைவு ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளானர். இதுபோன்ற அறிகுறிகளை வைத்து ஒரு விலங்கு ஜாம்பி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதா என்பதை அறியலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications